முந்தய பக்கம்

திருவள்ளூர் ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

25 Feb 2026, 3:22 pm
திருவள்ளூர் ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
<p><strong>திருவள்ளூர் ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>15 ஆண்டுகளுக்கு மேலுள்ள ஆட்டோ மற்றும் மோட்டார் வாகனங்களுக்கு உயர்த்தப்பட்ட அநியாயமான எப்சி (FC) கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும், ஆன்லைன் அபராத விதிப்பைக் கைவிட வேண்டும், சட்டவிரோதமாகச் செயல்படும் டூவீலர் பைக் டாக்ஸியைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் திருவள்ளூர் மாவட்டத்தில் சிஐடியு (CITU) ஆட்டோ சங்கத்தின் சார்பில் மாவட்டத் துணைத் தலைவர் சா. வேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மூத்த தோழர் பி. நடேசன், ஆட்டோ சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலாளர் எம். சந்திரசேகரன், மாவட்ட நிர்வாகிகள் எஸ். பரமசிவம், எஸ். சந்திரன், ஜெ. ஆனந்தன், எம். ரவிச்சந்திரன், வினோத்குமார் ஆகியோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram