அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து நள்ளிரவில் மின்வாரிய அலுவலக முற்றுகை
8 Jun 2026, 1:09 am
<p><strong>அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து நள்ளிரவில் மின்வாரிய அலுவலக முற்றுகை</strong></p><p>திருவள்ளூர், ஜூன் 7- திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில் கடந்த சில நாட்களாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அகரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநி யோகம் செய்யப்படும் இப்பகுதியில், கடுமையான கோடை வெப்பம் மற்றும் புழுக்கத்தால் முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். அடிக்கடி ஏற்படும் இந்த மின்தடையால் சிறு தொழில்களும், வணிக நிறுவனங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட் டுள்ளன. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளி டம் பலமுறை முறையிட்டும் எந்தவித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந் நிலையில், நேற்று முன்தினம் இரவும் பல முறை மின்தடை ஏற்பட்டதால், ஆத்திர மடைந்த பொதுமக்கள் ஆரணி சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாததோடு, அதிகாரிகள் யாரும் தொலைபேசி அழைப்புகளையும் ஏற்கவில்லை. இதனால் மேலும் ஆத்திரமடைந்த பொது மக்கள், நள்ளிரவில் பெரியபாளையம் - புதுவாயல் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாகச் சாலையின் இருபுறமும் வாக னங்கள் நீண்ட தூரம் ஸ்தம்பித்து நின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி காவல் துறையினர் பொது மக்களைக் கலைந்து செல்லுமாறு அறிவு றுத்தினர். ஆனால், அன்றாடம் சந்திக்கும் இந்த மின்சாரப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கை விடப் போவதில்லை எனப் பொதுமக்கள் உறுதியாகத் தெரிவித்துத் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.</p>
