தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

3 Jul 2026, 1:12 am
சென்னை விரைவு செய்திகள்

திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

சென்னை, ஜூலை 2- திருவள்ளூரில் உள்ள செயின்ட் பீட்டர் அண்ட் பால் சீஃபுட் எக்ஸ்போர்ட் பிரை வேட் லிமிடெட் நிறுவனத்தில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி நிகழ்ந்த அமோனியா வாயு கசிவு விபத்தில், சிகிச்சை பெற்று வந்த ஒடிசாவைச் சேர்ந்த அஞ்சனா ஜுவாங்கா (21) என்ற பெண் தொழிலாளி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலமானார். இந்த விபத்தில் உயிரிழந்த மற்ற 16 பேரின் உடல்கள் ஏற்கனவே அவர்க ளின் சொந்த மாநிலங்களான ஒடிசா (13), அசாம் (2) மற்றும் ஜார்க்கண்ட் (1) ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. விபத்தில் பாதிக்கப்பட்ட மொத்தம் 83 பேரில், 48 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். புதன்கிழமை நில வரப்படி, மருத்துவமனைகளில் இன்னும் 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் ஆதரவிலும், 10 பேர் ஆக்சிஜன் உதவியுடனும், 8 பேர் சீரான நிலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் அமோனியா வாயு அகற்றும் பணி

திருவள்ளூர், ஜூலை 2- ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்பேரில் உள்ள தனியார் கடல் உணவு தொழிற்சாலையில், ஜூலை 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் அமோனியா வாயு பாதுகாப்பான முறையில் அகற்றப்பட உள்ளது. இதையொட்டி, தொழிற்சாலையைச் சுற்றியுள்ள 500 மீட்டர் பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 3, மாலை 6 மணிக்குள் 300 மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுவர். 716-வது தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு 9952590412 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மக்கள் பதற்றமடைய வேண்டாம். காற்று வீசும் திசைக்கு எதிரான பகுதிக்குச் செல்லவும். வாய் மற்றும் மூக்கை ஈரத்துணியால் மூடிக்கொள்ளவும். வாயுப் பகுதியில் இருந்து வெளியேற காற்று வீசும் திசைக்கு குறுக்காக நடந்து சென்று, பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவும். மாவட்ட நிர்வாகத்திற்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியர் ச.கவிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதி: தவறி விழுந்து ஓட்டுநர் பலி

சென்னை, ஜூலை 2 – சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் தங்கியிருந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் சிவஞானம் (53), தூக்கக் கலக்கத்தில் மாடியின் கட்டட இடைவெளிக்குள் தவறி விழுந்து உயிரி ழந்தார். இச்சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

சவுகார்பேட்டையில் நகைக்கடை கொள்ளை

சென்னை, ஜூலை 2 – சவுகார்பேட்டையில் நகை உருக்கும் கடை உரி மையாளர் அங்கித் திலீப் மோரைத் தாக்கி 1.5 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்ததாக அருண், லோகேஷ் மற்றும் ரமணா ஆகிய 3 பேரை யானைக்கவுனி காவல் துறையினர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட வர் ஒருவரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்ப டைத்த நிலையில், அவ ரது வாக்குமூலத்தின் அடிப் படையில் மற்ற இருவரும் கைது செய்யப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன.

காலமானார்

சென்னை, ஜூலை 2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்.கே. நகர் பகுதி வ.உ.சி.நகர் கட்சி கிளை செயலாளர் கீதாவின் தாயார் தோழர் கல்யாணி அம்மாள் வியாழனன்று (ஜூலை 2) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.லோகநாதன், எஸ்.பாக்கியம், பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், நிர்வாகிகள் சேகர், மேரி, சரவணன், வெங்கடேசன், மஞ்சுளா, அம்சா பாய், ஏ.பழனி, ஜெயஸ்ரீ உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் காசிமேட்டில் உள்ள மயானத்தில் வியாழக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

கூடுவாஞ்சேரியில் மக்களை கடித்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு

கூடுவாஞ்சேரி, ஜூலை 2– கூடுவாஞ்சேரி துலுக் காணத்தம்மன் கோவில் தெருவில், ஒரே நாளில் எட்டு பேரை கடித்துக் காயப்படுத்திய குரங்கை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். குடிநீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் என மொத்தம் எட்டு பேரை கடித்துவிட்டு தப்பியோடிய அந்தக் குரங்கை, அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து கூண்டு வைத்து பிடித்தனர். சுமார் ஒரு மணி நேரத்தில் கூண்டில் சிக்கிய அந்தக் குரங்கு, பின்னர் பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. பாதிக்கப் பட்ட 8 நபர்களும் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிணற்றைத் தூர்வாரியபோது விஷவாயு தாக்கி ஒருவர் பலி

செங்கல்பட்டு, ஜூலை 2- கூடுவாஞ்சேரி காமராஜர்புரம் பகுதியில், சிவபிரகாசம் என்பவருக்குச் சொந்தமான கிணற்றைத் தூர்வாரச் சென்ற வினோத் (32) மற்றும் பிரபு (40) ஆகிய இருவர் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இருவரையும் மீட்ட நிலையில், வினோத் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. ஆபத்தான நிலையில் இருந்த பிரபு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் சிவபிரகாசத்தை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.