அமோனியா வாயு 3-வது நாளாக இன்றும் அகற்றப்படும்
6 Jul 2026, 12:01 am

அமோனியா வாயு 3-வது நாளாக இன்றும் அகற்றப்படும்

மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவள்ளூர், ஜூலை 5- திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த கன்னிகைபேர் பகுதியில் இயங்கி வரும் தனியார் கடல் உணவு பதப் படுத்தும் தொழிற்சாலையில், அமோனியா வாயு கசிவு ஏற்பட் டதைத் தொடர்ந்து, அங்கிருந்து எஞ்சிய வாயுவை அகற்றும் பணி கள் தீவிரமாக நடைபெற்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சி யர் ச.கவிதா ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

தொழிற்சாலையில் சேமிப்புத் தொட்டிகளில் எஞ்சியிருக்கும் சுமார் 1.5 முதல் 2 டன் அமோனியா வாயுவை எவ்வித பாதிப்பும் இன்றி அப்புறப்படுத்தும் பணி களை ஆட்சியர் ஆய்வு செய்தார். உரிய பாதுகாப்பு வழிகாட்டி நெறி முறைகளைப் பின்பற்றிப் பணி களை மேற்கொள்ளுமாறு சம்பந் தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மீட்புப் பணிகளின் நிலவரம்

ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சனிக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை முதற்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சனிக்கிழமை அன்று சேமிப்புத் தொட்டிகளில் இருந்த வாயு நடமாடும் சேமிப்புத் தொட்டி களுக்கு மாற்றப்பட்டது. இரவு முதல் குழாய்களில் எஞ்சியிருந்த அமோனியா வாயு குளிர்விக்கப் பட்டு, நடமாடும் சேமிப்புத் தொட்டி களில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் ஞாயிறு மாலை 5 மணி வரை நடைபெற்றது. பணிகள் நிறை வடையவில்லை.

அகற்றும் பணி - நிலவரம்

பாதுகாப்புக் கருதி, ஜூலை 4-ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கப்பட்ட இப்பணிகளில், மாலை 5 மணிக்குள் 75 சதவீத அமோனியா வாயு மூன்று சேமிப்பு கலன்களிலிருந்து ராட்சத உருளை வாகனங்களுக்கு மாற்றப்பட்டது. எஞ்சியுள்ள 25 சதவீத வாயுவை இயந்திர இணைப்பு குழாய்களி லிருந்து வெளியேற்றும் பணி, இரண்டாவது நாளாக ஞாயிறன்று காலை 9 மணிக்குத் தொடங்கி யது.

இருப்பினும், குழாய்களில் தேங்கியுள்ள அமோனியாவை எளி தில் வெளியேற்ற முடியாததால் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட் டன. இதையடுத்து, வாயுவை சிறிது சிறிதாகச் சேமிப்பு வாகனங் களுக்கு மாற்றும் முயற்சி மேற்கொ ள்ளப்பட்டது. பாதுகாப்பு காரணங் களுக்காக மாலை 5 மணியுடன் இப்பணிகள் தற்காலிகமாக நிறுத் தப்பட்டன. முழுமையாக வாயுவை அகற்றும் பணி திங்கட்கிழமை தொடரும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

ஆட்சியர் கவிதா பேட்டி

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ச.கவிதா செய்தியாளர்களிடம் கூறுகையில், “இயந்திர இணைப்பு குழாய்களில் உள்ள அமோனி யாவை படிப்படியாக அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு கருதி முழுமையாக அகற்றும் வரை பணிகள் தொடரும். திங்கட்கிழமை பணியின் மூன்றாம் நாள் தொடரும்” என்று தெரிவித்தார்.

பள்ளிகள் மற்றும் போக்கு வரத்திற்கு முக்கிய அறிவிப்பு

விபத்து நடந்த நிறுவனத்திலி ருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள இரு தொழிற்சாலைகள் மற்றும் தனியார் கல்லூரி ஆகி யவை திங்களன்று வழக்கம்போல் இயங்கும்.

ஏற்றுமதி நிறுவனத்தின் வாயில் வெளிப்புற சாலையில் போக்கு வரத்திற்கான தடை நீடிக்கிறது. மற்றொரு சாலையில் வாகனங்கள் வந்து செல்வதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளு டன் ஆலோசித்து, இது குறித்த அறி விப்பு இன்று இரவு வெளியிடப் படும் என்று ஆட்சியர் தெரிவித் துள்ளார்.

இந்த ஆய்வின்போது, திரு வள்ளூர் உதவி ஆட்சியர் (பயிற்சி) பி.பவித்ரா, மாவட்ட சுகாதார அலு வலர் பிரியா ராஜ், மாசுக்கட்டுப் பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறி யாளர் செல்வ இளவரசி, செயற் பொறியாளர் தணிகாச்சலம், திரு வள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.ரவிச்சந்திரன், ஊத்துக் கோட்டை வட்டாட்சியர் ராஜேஷ் குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.