திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு 7 தொழிலாளர் பலியானதாக தகவல் 2 பேர் பலி, 5 பேர் கவலைக்கிடம் என அரசு அறிவிப்பு
21 Jun 2026, 9:01 pm

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு 7 தொழிலாளர் பலியானதாக தகவல் 2 பேர் பலி, 5 பேர் கவலைக்கிடம் என அரசு அறிவிப்பு

திருவள்ளூர், ஜூன் 21- தனியார் தொழிற்சாலையில் ஞாயி றன்று நிகழ்ந்த அமோனியா வாயு கசிந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்த தாகவும், நான்கு பேர் கவலைக்கிட மாக உள்ளதாகவும் தகவல்கள் தெரி விக்கின்றன. எனினும், இவ்விபத்தில் 2 பேர் பலி; 5 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித் துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பெரி யபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை யில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் திடீரென அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஏழு பெண் தொழி லாளர்கள் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். 9 பேர் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் நான்கு பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

20 ஆண்டுகளாக இயங்கும் தொழிற்சாலை

பீட்டர் அண்ட் பவுல் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் என்ற பெயரில் இயங்கும் இத்தொழிற்சாலை 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இரவு-பகல் என இரண்டு ஷிப்டுகளில் 300-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த தனியார் மீன் உணவு ஏற்று மதி தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் எதிர்பாராதவிதமாக அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. விபத்து நடந்த வேளையில் சுமார் 120 தொழிலாளர்கள் பணியில் இருந்த னர். பெரும்பாலும் கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களே இங்கு வேலை செய்கின்றனர். இந்நிறுவனத்தில் மொத்தம் 300-க்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் அங்கேயே தங்கி பணியாற்றி வருகின்றனர். விபத்தில் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிமிடங்களில் சாவு; மூக்கு-வாயில் ரத்தம்

ஞாயிறன்று மதியம் திடீரென கசிந்த அமோனியா வாயுவை சுவாசித்த தொழிலாளர்கள் சில நிமிடங்களி லேயே அடுத்தடுத்து மூச்சுத்திணற லுடன் மயங்கி விழுந்தனர். சிலரது மூக்கு மற்றும் வாய் பகுதிகளில் இருந்து ரத்தம் கசிந்தது. இதனால் அங்கிருந்த பிற தொழிலாளர்கள் அச்சத்தில் உறைந்தனர்.

தகவலறிந்த தீயணைப்புப் படை யினரும் போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பாதிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட் டோரை மஞ்சங்கரணை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மீதமுள்ள சுமார் 30 பேரை செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது. மோசமான நிலையில் இருந்த ஆறு பேர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்து வமனையில் தீவிர சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டனர். ஊத்துக்கோட்டை, பொன்னேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மருத்துவர் குழுக்கள் உயிரைக் காப்பாற்றப் போராடி வருகின்றன.

விசாரணைக்கு உத்தரவு; அமைச்சர் குமார் நேரில் ஆய்வு

சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தின் உறுப்பினர் செயலாளர், பொது சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநர் ஆகியோர் இக்குழு வில் உறுப்பினர்களாக இடம்பெறு கின்றனர். 24 மணி நேரத்திற்குள் இடைக் கால அறிக்கையும், 3 நாட்களுக்குள் இறுதி அறிக்கையும் சமர்ப்பிக்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் தர மான, உயர்நிலை சிகிச்சை அளிக்கப் படுவதை உறுதி செய்யுமாறும், தேவை யான அனைத்து உதவிகளையும் செய்யுமாறும் மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தொழில்துறை அமைச்சர் குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சந்தித்து ஆறுதலும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தத் துயரமான சம்ப வம் மிகவும் கவலை அளிப்பதாகவும் முதலமைச்சர் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகவும் அவர் தெரி வித்தார். சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட உயர் மருத்துவர்கள் அடங்கிய குழுவை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு முதலமைச்சரின் நிவாரணத் தொகை யும் தொழிற்சங்கச் சட்டத்தின்படி வழங்க வேண்டிய அனைத்து நிவார ணங்களும் வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்து முறையான பதிவு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தேசிய பேரிடர் மீட்புப் படை களம்

தொழிற்சாலை உரிமையாளர் மோகன் மற்றும் மேலாளர் டேனியல் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாது காப்பு கவச உடையுடன் தேசிய பேரி டர் மீட்புக் குழுவினர் தொழிற்சாலைக் குள் இறங்கி மீட்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா, காஞ்சிபுரம் சரக டிஐஜி சேஷசாயி, மாவட்ட எஸ்.பி. சாய்பிரனீத் ஆகியோர் மருத்துவமனைகளுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களும் நேரில் வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தனர்.

ரூ.2 லட்சம் நிவாரண உதவி அறிவிப்பு

இந்நிலையில், அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநர் இரங்கல்

இந்த துயரமான சம்பவம் குறித்து ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வலிமையும் தைரியமும் கிடைக்கவும், சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடையவும் தாம் பிரார்த்திப்பதாக அவர் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கட்சி ஆறுதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.விஜயன், ஜி.சம்பத், ஏ.ஜி.சந்தானம், மூத்த தோழர் கே.செல்வராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் இ.ஜெயவேல், ஏ.பத்மா, கன்னியப்பன் ஆகியோர் மஞ்சங்கரணை தனியார் மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

ஜூன் 24-இல் சிஐடியு ஆர்ப்பாட்டம்

சட்ட விரோதமாக நடைபெறும் தனியார் நிர்வாகத்தைக் கண்டித்து ஜூன் 24 ஆம் தேதி கன்னிகைப்பேரில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சிஐடியு மாவட்டத் தலைவர் கே. விஜயன் மற்றும் மாவட்டச் செயலாளர் ஏ.ஜி.சந்தானம் அறிவித்துள்ளனர். தலைவர்கள் ஆறுதல் பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த செய்தி வேதனை அளிக்கிறது. அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல், ஆறுதலை தெரி விக்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெ ரிவித்துள்ளார். மேலும் ‘மருத்துவ மனையில் உள்ள தொழிலாளர்களுக்கு உயர் சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர் நலன், பாதுகாப்பில் எந்தவொரு சமரசத்துக்கும் அரசு இடம் தரக் கூடாது’ எனவும் உதயநிதி தெரிவித்துள்ளார். அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சிபிஎம் மாநிலச் செயலாளர் அமோனியா விஷவாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ஜூன் 22 (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறுகிறார்.

சிகிச்சையை மேற்பார்வையிட அமைச்சர்கள் நியமனம்

பெரும் விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளை மேற்பார்வையிட அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா ஆகி யோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர்கள் ஆறுதல்

அமோனியா வாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், ராஜ்மோகன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிகிச்சை பெறும் ஒருவரின் நிலைமை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதற்கிடையில், விஷத்தன்மை கொண்ட ரசாயனங்களை பயன்படுத்தும் ஆலைகளை அமைச்சர் அருண்குமார் ஆய்வு செய்தார். பின்னர் செய்தி யாளர்களைச் சந்தித்த அமைச்சர் அருண் ராஜ், “இந்த சம்பவத்தில் ஏழு பேர் பலியான தாக கூறப்படுவது உண்மை அல்ல. இரண்டு பேர் மட்டுமே பலியாகி உள்ளனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் எட்டு பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் தெரிவித்தார். இதுபோன்ற துயரச் சம்பவங்கள், இனியும் ஏற்படாமல் இருக்க, தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் (SoP) பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வுகளை நடத்துவதோடு, தேவை ஏற்படின், புதிய SoP-ஐ வெளியிட அரசு முன்வர வேண்டும். தொழிலாளர் நலனிலும் - பாதுகாப்பிலும், எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்து கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார். “அம்மோனியா கசிவு விவகாரத்தில் விதிமீறல் உறுதி செய்யப்பட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்று அமைச்சர் முகமது பர்வேஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.