திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு - உயிரிழப்பு 9 ஆக உயர்வு
10 hours before

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள கடல் உணவுப் பதப்படுத்தும் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள கடல் உணவுப் பதப்படுத்தும் தனியார் நிறுவனத்தில் கடந்த ஜூன் 21-ஆம் தேதியன்று அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. தொழிலாளர்களுக்கு வாய், மூக்கு, கண் மற்றும் காதுகளில் ரத்தம் வந்து, சுமார் 70-க்கும் மேற்பட்டோர் மயக்க மடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பெரியபாளையம் போலீசார், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மஞ்சங்காரணை, செங்குன்றம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பிவைத்தனர். இதில் இன்று காலை வரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மோகன், ஜோசப் ஜெகன் மற்றும் மேலாளர் டேனியல் ஆகியோருக்கு 15 நாட்களுக்கு நீதிமன்ற காவல் விதித்து ஊத்துக்கோட்டை நீதிமன்றம் உத்தரபிட்டுள்ளது. வாயு கசிவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.