முந்தய பக்கம்

அமோனியா வாயு கசிவு : பலி 12 ஆனது!

25 Jun 2026, 9:06 pm
அமோனியா வாயு கசிவு : பலி 12 ஆனது!
<p><strong>அமோனியா வாயு கசிவு : பலி 12 ஆனது!</strong></p><p>சென்னை, ஜூன் 25 - திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் கடல் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட 83 பேரில், தற்போது 67 பேர் சென்னை மற்றும் திருவள்ளூர் அரசு மருத்துவ மனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 64 பேர் பெண்கள், 3 பேர் ஆண்கள். இவர்களில் 16 பேர் வென்டிலேட்டர் உதவியுடனும், 21 பேர் ஆக்சிஜன் உதவியுடனும் உள்ளனர். மீதமுள்ள 30 பேரின் உடல்நிலை சீராக உள்ளது. இதுவரை 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்த 12 பேரில் 9 பேர் ஒடிசாவையும், 2 பேர் அசாமையும் சேர்ந்தவர்கள். இவர்களில் 7 பேரின் உடல்கள் ஏற்கெனவே ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 பேரின் உடல்களை அனுப்பி வைக்க சட்டப்பூர்வ நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>
Share
FacebookXWhatsAppTelegram