திருவள்ளூர் ஆலை அம்மோனியா வாயு கசிவு: 8 தொழிலாளர்கள் பலி சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பம்; அதிமுக வெளிநடப்பு!
yesterday

திருவள்ளூர் ஆலை அம்மோனியா வாயு கசிவு: 8 தொழிலாளர்கள் பலி சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பம்; அதிமுக வெளிநடப்பு!

சென்னை, ஜூன் 22 - திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மஞ்சகாரணை (கன்னிகைப்பேர்) கிரா மத்தில் இயங்கி வரும் தனியார் இறால் பதப்படுத் தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரி ழந்துள்ளனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பிரச்சனை திங்களன்று தமிழக சட்டப் பேரவையில் பெரும் புயலைக் கிளப்பியதுடன், எதிர்க்கட்சிகளுக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு, அதிமுக உறுப்பி னர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் அமளி; வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவை திங்களன்று காலை கூடியதும், அம்மோனியா வாயுக் கசிவு விபத்து குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக, அதிமுக, சிபிஎம், சிபிஐ, பாமக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் தொடர் வலியுறுத்தல்களை முன்வைத் தன. எனினும், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் எதிர்க் கட்சிகளைப் பேச அனுமதிக்காமல், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸை விதி 110-இன் கீழ் விளக்கம் அளிக்க அனுமதித்தார்.

அமைச்சரின் விளக்கத்திற்கு முன்பாகத் தங்க ளுக்குப் பேச வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கோரி திமுக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடு பட்டனர். பின்னர், விதி 110-இன் கீழ் அமைச்சர் விளக்கம் அளித்த பிறகு மற்றவர்கள் பேசுவதற்கு விதிமுறைகளின்படி அனுமதி இல்லை என்று சபா நாயகர் மறுத்துவிட்டார். நடுநிலையுடன் செயல்பட வேண்டிய சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்து, வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, உரிமை மீறல் பிரச்சனை தொடர் பாக அவையில் பேச அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

சபாநாயகர் மற்றும் அமைச்சரின் விளக்கம்

எதிர்க்கட்சிகளின் அமளி குறித்துப் பேசிய சபா நாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “எப்போது அனுமதி தர வேண்டும் என்று எனக்குத் தெரியும். அவை நடவ டிக்கைகள் நேரலை செய்யப்படுவதால் எச்சரிக் கையுடனும், கண்ணியத்துடனும் பேச வேண்டும். அவையின் மாண்பைக் குலைத்தால் எதிர்காலத் தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கண்டிப் புடன் கூறினார். மேலும், கடந்த வெள்ளிக்கிழமை அவையில் நடந்த விரும்பத்தகாத சைகை போன்ற செயல்கள் வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, அவையில் விதி 110-இன் கீழ் விளக்கம் அளித்த அமைச்சர் பர்வேஸ், இந்த விபத்தில் 70 பெண்கள், 4 ஆண்கள் என மொத்தம் 74 பேர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தாகத் தெரிவித்தார். இதில் 15 பேர் அரசு மருத்துவ மனையிலும், 27 பேர் தனியார் மருத்துவமனையி லும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு முதல மைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், உடல்களை அவர் களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் விஜய் உத்தர விட்டுள்ளதாக அமைச்சர் பேரவையில் தெரிவித் தார். தொடர்ந்து, இறந்தோர் குடும்பத்திற்குத் தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக கொறடா எ.வ. வேலு அவையில் வலியுறுத்தி னார்.

சிஐடியு மாநிலக்குழு கடும் கண்டனம்

இந்த விபத்து குறித்து சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் விடுத்துள்ள அறிக்கை யில், “புனித பீட்டர் பால் சீ புட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ்” என்ற அந்தத் தனியார் நிறுவனத்தில் ஒரிசா, அசாம், மணிப்பூர், கேரளா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 240-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், குறிப்பாக இளம் பெண்கள் தங்கிப் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களில் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளும் அடங்குவர். ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட இந்த வாயுக் கசிவின் போது, இரவுப் பணி முடிந்து ஆலைக்குள்ளேயே தங்கியிருந்த தொழிலாளர் களுக்கே ரத்தக்கசிவும் மயக்கமும் ஏற்பட்டு உள்ளது. வெளிமாநிலத் தொழிலாளர்களுக் கான முறையான பதிவு, சட்டப்படியான கூலி எதுவு மின்றி, ஆலைக்குள்ளேயே தொழிலாளர்களைத் தங்க வைத்து மூன்று ஷிப்ட் வேலை வாங்கிய நிர்வாகத்தின் அலட்சியமும், தொழிலாளர் நலத் துறையின் மெத்தனப் போக்குமே இந்த விபத்துக் குக் காரணம் எனச் சாடியுள்ளார். முந்தைய அரசு தொழிற்சாலைகள் சட்டத்தில் செய்த திருத்தத்தைப் பயன்படுத்தி, முதலாளிகள் லாபத்திற்காகப் பெண்களை இரவு நேர அபாய கரமான பணிகளில் ஈடுபடுத்துகின்றனர். மேலும், ஒன்றிய மோடி அரசின் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின்படி, 300-க்கும் குறைவான தொழிலாளர்கள் உள்ள ஆலைகளில் ஆய்வாளர் களின் தணிக்கை தேவையில்லை என்ற விதி இதுபோன்ற கொடூர விபத்துகளை மேலும் அதி கரிக்கும் என்று சிஐடியு எச்சரித்துள்ளது.

சிஐடியு கோரிக்கைகள்:

• உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்க ளுக்குத் தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

• விபத்து நடந்த தொழிற்சாலையை உடனடி யாக மூடி, முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

• சட்டவிரோதமாகச் சிறுமிகளை வேலைக்கு அமர்த்திய நிர்வாகத்தின் மீது குற்றவியல் நடவ டிக்கையும், கண்காணிக்கத் தவறிய அதிகாரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

• தொழிற்சாலைச் சட்டத்தில் பெண்களை இரவு நேர அபாயகரமான பணிகளில் அனு மதிக்கலாம் என்ற திருத்தப்பிரிவை தமிழ்நாடு அரசு உடனடியாக நீக்க வேண்டும் என சிஐ டியு வலியுறுத்தியுள்ளது.

இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும்: பெ.சண்முகம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அவருடன் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் க. கனகராஜ், கே. சாமுவேல்ராஜ், சிஐடியு மாநில பொதுச் செயலாளர் எஸ். கண்ணன், கட்சியின் மாவட்டச் செயலா ளர்கள் ஜி. கோபால், ஜி. செல்வா ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பெ. சண்முகம் கூறியதாவது: “பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 25 வயதுக் குட்பட்ட இளம் பெண்களும், 18 வயதுக்குக் குறைவான குழந்தை உழைப்பாளர்களும் ஆவர். தொழிலாளர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்காமல் ஆலைக்குள்ளேயே தங்க வைத்த தால் தான் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2025 டிசம்பரில் இந்த ஆலை மீது வழக்கு பதியப்பட்டிருந்தும், கடந்த 6 மாதங்களாக எவ்விதத் தொடர் ஆய்வும் நடத்தப்படவில்லை. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ரூ. 2 லட்சம் இழப்பீடு மிக மிகக் குறைவானது. இறந்தவர்கள் இளம் வயதினர் என்பதால் ஆலை நிர்வாகத்திடமிருந்து கூடுதல் இழப்பீட்டைப் பெற்று அரசு வழங்க வேண்டும்.

மோடி அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தால், 300 தொழிலாளர்களுக்குக் குறைவான ஆலைகளில் ஆய்வு கள் முற்றிலும் முடங்கி, தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து மேலும் அதிகரிக்கும். எனவே, புலம்பெயர் தொழிலாளர்களைச் சட்டப்படி பதிவு செய்து அவர்களின் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.