திருவையாறு திமுக வேட்பாளர் துரை.சந்திரசேகரன் சிபிஎம் அலுவலகம் வருகை
3 Apr 2026, 6:05 pm
<p><strong>திருவையாறு திமுக வேட்பாளர் துரை.சந்திரசேகரன் சிபிஎம் அலுவலகம் வருகை</strong></p>
<p>தஞ்சாவூர், ஏப். 3- தஞ்சாவூர் கணபதி நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திற்கு, திருவையாறு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் துரை.சந்திரசேகரன் வருகை தந்து, நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவருக்கு, மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முழு மூச்சுடன் பணியாற்றி வெற்றி பெற பாடுபடுவோம் என கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் உறுதியளித்தார். அப்போது, மூத்த தலைவர் என்.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.வி. கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி, என்.சரவணன், ஆர். கலைச்செல்வி, கே.அபிமன்னன், மாவட்டக் குழு உறுப்பினர் என். குருசாமி, சரிதா, மாநகரச் செயலாளர் வடிவேலன், போக்குவரத்து அரங்கம் திருநாவுக்கரசு, ஜீவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>
