தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருவாடானை அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட தரைப்பாலம் உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

26 Jun 2026, 10:50 pm
திருவாடானை அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட தரைப்பாலம் உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
<p><strong>திருவாடானை அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட தரைப்பாலம் உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்</strong></p><p>இராமநாதபுரம், ஜூன்.26 இராமநாதபுரம் மாவட்டம், திருவாடா னை வட்டத்திற்கு உட்பட்ட கருப்பூர் – காரங்காடு கிராமங்களை இணைக்கும் வகையில் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரசுத் திட்டங்களின் கீழ் மேற்கொள் ளப்படும் பணிகளின் அருகே, திட்ட நிதி, பணியின் மதிப்பு, பணி தொடங்கிய மற்றும் நிறைவு பெற்ற தேதி உள்ளிட்ட விவரங்க ளை தெரிவிக்கும் தகவல் பலகை கட்டா யமாக வைக்கப்பட வேண்டும். ஆனால், இந்தப் பாலத்தின் அருகே எந்தவித தகவல் பலகையும் வைக்கப்படாததால் திட்டம் குறித்த விவரங்கள் பொதுமக்களுக்கு தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பாலம் கட்டி முடிக்கப்பட்டு குறுகிய காலமே ஆன நிலையில், அதன் பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் ஏற் பட்டுள்ளதாகவும் மழைக்காலங்களில் வெள்ளநீர் அதிகரிக்கும் சூழலில் பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி, போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் கவலையுடன் தெரி விக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரி கள் உடனடியாக நேரில் ஆய்வு மேற் கொண்டு பாலத்தின் தரத்தை பரிசோதிக்க வேண்டும் என்றும் விரிசல்கள் மற்றும் சேதங்களை அவசர கால அடிப்படையில் சீர மைத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர். மேலும், பாலம் எந்தத் திட்டத்தின் கீழ், எவ்வளவு நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்டது என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களை யும் வெளிப்படையாக அறிவித்து, அரசுப் பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலி யுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.