திருத்துறைப்பூண்டி சிபிஐ வேட்பாளர் க.மாரிமுத்து வேட்புமனுத் தாக்கல்
4 Apr 2026, 4:02 pm
<p><strong>திருத்துறைப்பூண்டி சிபிஐ வேட்பாளர் க.மாரிமுத்து வேட்புமனுத் தாக்கல்</strong></p>
<p>திருவாரூர், ஏப். 4- திருவாரூர் மாவட்டம் திருத்து றைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், சனிக்கிழமை திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் க. மாரிமுத்து, தேர்தல் அதிகாரி செல்வபாண்டியிடம் மனுத் தாக்கல் செய்தார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழு செயலாளர் கோ. பழனிச்சாமி, திமுக நகர கழகச் செயலாளர் ஆர்.எஸ். பாண்டியன், காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் எழிலரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.ஜி. ரகுராமன், சி. ஜோதிபாசு, நகரச் செயலாளர் கே. கோபு, ஒன்றியச் செயலாளர்கள் திருத்துறைப்பூண்டி டி.வி. காரல் மார்க்ஸ், முத்துப்பேட்டை கே.பழனி ச்சாமி, கோட்டூர் கே.கோவிந்தராஜ் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
