திருப்புவனம் காவல் நிலையச் சாவு: அதிர்ச்சிகரமான உண்மைகள்!
11 Sept 2026, 9:36 pm

திருப்புவனம் காவல் நிலையச் சாவு: அதிர்ச்சிகரமான உண்மைகள்!

சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே சட்டத்தை மீறி, விசாரணை என்றபெயரில் ஒருவரைச் சித்திரவதை செய்து உயிரிழக்கச் செய்வது ஜனநாயக சமூகத்தின் மனசாட்சியையே உலுக்கும் குற்றமாகும். சிவகங்கைமாவட்டம் திருப்புவனத்தில் கோயில் பாதுகாவலர் அஜித் குமார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்த விசாரணையில் கிடைத்துள்ள பல தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இது காவல்துறையின் செயல்பாடுகுறித்து மிகக் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.

அந்த இளைஞர் உடலில் 44 வெளிப்புற காயங்கள் பதிவாகியிருப்பது சாதாரண விசாரணை நடவடிக்கையுடன் எந்த வகையிலும் பொருந்தாத அதிர்ச்சிகரமான உண்மையாகும். குற்றம் செய்ததாகசந்தேகிக்கப்படும் ஒருவருக்கும் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள்உள்ளன. குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர்குற்றவாளி அல்ல என்பதே நமது சட்டத்தின் அடிப்படை.

இந்த வழக்கில் சட்டவிரோதக் காவல், சித்திரவதை, கொலை, சதித்திட்டம், தடயங்களை அழித்தல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சம்பவத்தைமறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இது உண்மை என நிரூபிக்கப்பட்டால், தனிநபர்கள் செய்த தவறு என்ற அளவில் இதனைச் சுருக்கிவிட முடியாது. காவல்துறையின் அதிகாரப் பண்பாடு, மேலதிகாரிகளின் கண்காணிப்பு மற்றும் காவல் நிலையங்களில் நடைபெறும்விசாரணை நடைமுறைகள் அனைத்தும் கடுமையாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய நிலை இதுவாகும்.

காவல் நிலையக் காவல் மரணம் என்பது ஒருகுடும்பத்தின் துயரம் மட்டுமல்ல; அரசின் சட்டப்பூர்வமான அதிகாரத்தின் மீதான நம்பிக்கைக்கு ஏற்படும் மிகப்பெரிய காயமாகும். காவல்துறையினரின் கைகளில் இருக்கும் ஒருவர் உயிருடன் நீதிமன்றத்தைச் சந்திக்க வேண்டுமே தவிர, உயிரற்ற உடலாக வீட்டுக்குத் திரும்பக் கூடாது. இந்தவழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நான்கு காவல் அதிகாரிகள் நீதிமன்றக் காவலுக்குஅனுப்பப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க சட்ட நடவடிக்கையாகும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.32.5 லட்சம் இழப்பீடு, வீட்டுமனை, வேலைவாய்ப்பு மற்றும் சாட்சிகள்பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதும் முக்கியமான நடவடிக்கைகளாகும்.

இவ்வழக்கு எந்தவிதமான அதிகார அழுத்தத்துக்கும், அரசியல் தலையீட்டுக்கும், ஆதாரச்சிதைவுக்கும் இடமளிக்காமல் முழுமையாகவும் விரைவாகவும் விசாரிக்கப்பட வேண்டும். குற்றம்நிரூபிக்கப்பட்டால், பதவி, அந்தஸ்து, காவல் அதிகாரம் எதையும் பொருட்படுத்தாமல் கடுமையான சட்டத் தண்டனைவழங்கப்பட வேண்டும்.