தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக அரசின் முடிவு என்ன?

5 Jun 2026, 1:53 am
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக அரசின் முடிவு என்ன?
<p><strong>திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக அரசின் முடிவு என்ன?</strong></p><p>உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி மதுரை, ஜூன் 4- திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப் பட்ட உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசா ரணையில், இதுகுறித்த அரசின் நிலைப் பாடு என்ன என்பதை தெரிவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்ற அனு மதி வழங்கக் கோரி ராம ரவிக்குமார் என்ப வர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த் திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தர விட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்த ரவை நடைமுறைப்படுத்த போதிய நட வடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகளிலும் பல் வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இந்த உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழனன்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், “அவமதிப்பு வழக்குகள் ஒரு பக்கம் இருக்கட்டும். நீதி மன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே? இது ஜனநாயக நாடு. மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். உத்தரவை நடைமுறைப்படுத்து வதில் என்ன சிக்கல் உள்ளது?” என்று கேள்வி எழுப்பினர். இதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இது தொடர்பாக உயர் அதி காரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டியுள்ளது” என்று தெரிவித்தார். மேலும், தர்கா நிர்வாகம் சார்பில் தங்க ளையும் வழக்கில் ஒரு தரப்பாக இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட் டது. இதையடுத்து, திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான நீதிமன்ற உத்தரவு குறித்து அரசின் முடிவு என்ன என்பதை தெரி விக்குமாறு அரசுத் தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசார ணையை ஜூன் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.