தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

24 Jun 2026, 10:49 pm
திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

புதுதில்லி, ஜூன் 24- மதுரை திருப்பரங்குன்றம் மலை யில் கார்த்திகை தீபத் திருநாளின் போது விளக்கேற்றுவதற்கு அனு மதி வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் பி. கருணாகரன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தொல்லியல் மற்றும் சுற்றுச்சூழல் கவலைகள்

அதில், திருப்பரங்குன்றம் மலைப்பகுதி என்பது, ‘பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் எஞ்சியவை சட்டத்தின்’ கீழ், ஒன்றிய அரசால் பாதுகாக்கப்பட்ட ஒரு தேசிய நினைவுச் சின்னமாகும். இந்த மலை யில் அமைந்துள்ள பழமையான மற்றும் எளிதில் சேதமடையக்கூடிய குடைவரைக் கோவில்கள், பாறைக் குகைகள், கல்வெட்டுகள் மற்றும் இயற்கை நிலப்பரப்புகள் விளக் கேற்றுவதால் சேதமடையக்கூடும் என்று தமிழக அரசின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. கடந்த ஜனவரி 6 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, தனி நீதிபதி அமர்வு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து, திருவிழா நாளில் விளக்கேற்ற உத்த ரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை பிறப்பிக்கும் போது உயர்நீதி மன்றம் வரலாற்றுப் பாரம்பரியம், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான கவலைகளைப் போதிய அளவில் பரிசீலிக்கவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத நல்லிணக்கக் குலைவு மற்றும் சட்டம்-ஒழுங்கு சிக்கல்

மதுரை மாவட்டம் திருப்பரங் குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குப் பின்புறம் உள்ள குன்றின் மீது, கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்றுவது தலை முறை தலைமுறையாகப் பின்பற்றப் படும் வழக்கமாகும். ஆனால் கடந்த ஆண்டு, ஆர்எஸ்எஸ், இந்து முன் னணி மற்றும் பாஜக உள்ளிட்ட வல துசாரி அமைப்புகள், வழக்கமாக உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே ஏற்றப்படும் தீபத்தை விடுத்து, அதே மலையில் அமைந்துள்ள ‘ஹசரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா’ அருகில் உள்ள ஒரு தூணின் மீது ஏற்ற வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தனர். இப்பகுதியில் நீண்டகாலமாக மதரீதியான பதற்றங்களை உரு வாக்க வலதுசாரி அமைப்புகள் முயன்று வரும் சூழலில், தர்கா அருகில் விளக்கேற்றுவது மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதிலும் மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும் மேல்முறையீட்டு மனுவில் தமிழ்நாடு அரசு வாதிட்டுள்ளது.

முந்தைய திமுக அரசின் நிலைப்பாடு

முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இவ்வழக் கின் விசாரணையின்போது, அப்போ தைய திமுக அரசு உயர்நீதிமன்ற மது ரைக் கிளையில் எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்திருந்தது. அதில், வலதுசாரி அமைப்புகள் தீபமேற்றக் கோரும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள குறிப்பிட்ட அந்தத் தூண், சமண (ஜைன) சமூகத்தினரால் நிறுவப்பட் டது என்றும், அது இந்து மத வழி பாட்டிற்குரியது அல்ல என்றும் தெளி வுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, பாரம்பரியச் சின்னங் களைப் பாதுகாக்கவும், சட்டம் - ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தை பேணவும் உயர்நீதிமன்றத்தின் உத்தர விற்கு உச்சநீதிமன்றம் உடனடியாக இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று தவெக அரசு தனது மேல்முறையீட்டு மனுவில் வலியுறுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.