தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கவனமாக கையாள்க!

3 Aug 2026, 8:25 pm
கவனமாக கையாள்க!

கவனமாக கையாள்க!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்காவிற்கு அருகே உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு தொடர்பாக விசாரணை செய்யஉச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என்று தமிழகத்தில் அமைந்த தவெகஅரசு முடிவெடுத்தது பொருத்தமானது. இந்த மனுவின் அடிப்படையில் தீர்ப்பில் உள்ளசட்டஅம்சங்களை விரிவாக ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த வழக்கு தொடர்பாக பதில் மனுதாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த வழக்கை விசாரித்த விதமும், உத்தரவு வழங்கியபின்பு அதை செயல்படுத்த மேற்கொண்ட அணுகுமுறையும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டதும் அதற்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டதும் நடந்தது. சட்டம் ஒழுங்கு நிலைமையைகருத்தில் கொண்டு முந்தைய மாநில அரசு இதற்கு இணங்க மறுத்த நிலையில், இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தமனுதாரரான ராம.ரவிக்குமார் என்பவரை தர்கா அருகில் உள்ளதூணில் தீபம் ஏற்றுமாறு கூறியதும், உயர்நீதிமன்ற பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்புப் படையினரை அனுப்பியதும் அதீதமான, அத்துமீறிய நடவடிக்கை என்று சர்ச்சை எழுந்தது. மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்புநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற கிளையின் இரு நீதிபதிகள் அமர்வாயத்தில் தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களில்முரண்பட்ட வாதங்கள் இடம் பெற்றிருந்ததும், தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டு, தர்காவிற்கு அருகில் உள்ள தூணில்தீபமேற்ற உத்தரவிடப்பட்டது.

இந்தப் பின்னணியில் உச்சநீதிமன்றத்தில் திருப்பரங்குன்றத்தில் பேணப்பட்டு வந்துள்ள மத நல்லிணக்கம், காலம் காலமாக பின்பற்றப்பட்டு வந்துள்ள வழிபாட்டு மரபு மற்றும்பாரம்பரியம், திருப்பரங்குன்ற மலையின் பன்முகத்தன்மை, சட்டம்ஒழுங்கு உள்ளிட்ட அம்சங்களுடன்சட்டப்பூர்வமாக தமிழக அரசு இந்த வழக்கை நடத்த வேண்டும். திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாகமாற்றுவோம் என்று கொக்கரித்தவர்களுக்கு எந்தவகையிலும் வாய்ப்பு அளித்துவிடக்கூடாது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.