முந்தய பக்கம்

திருப்போரூரில் ஒருவேளை உணவு புறக்கணிப்பு போராட்டம்

4 hours before
திருப்போரூரில் ஒருவேளை உணவு புறக்கணிப்பு போராட்டம்
<p><strong>திருப்போரூரில் ஒருவேளை உணவு புறக்கணிப்பு போராட்டம்</strong></p><p>ஜனநாயக ரீதியாக நீட் தேர்வை எதிர்த்தும், 3 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும் இளைஞர்களையும் தாக்கி, வலுக்கட்டாயமாகக் கைது செய்த அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்து, வர்க்க வெகுஜன அமைப்புகள் சார்பில் ஒருவேளை உணவு புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற இப்போராட்டத்திற்குத் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி ஜி.மாரி தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.பகத்சிங் தாஸ், வட்டச் செயலாளர் எம்.செல்வம், வட்டக் குழு உறுப்பினர்கள் லிங்கன், சிதம்பரம், விமலா ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram