தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பரங்குன்றத்தின் அமைதி, நல்லிணக்கத்தைப் பாதுகாப்போம்! அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை

26 minutes before
திருப்பரங்குன்றத்தின் அமைதி, நல்லிணக்கத்தைப் பாதுகாப்போம்! அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை

திருப்பரங்குன்றத்தின் அமைதி, நல்லிணக்கத்தைப் பாதுகாப்போம்!

அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை

மதுரை, நவ. 23 –சங்- பரிவார் அமைப்புகளின் மதவெறி சக்திகளின் முயற்சிகளை முறியடித்து, திருப்பரங்குன்றத்தில் அமைதியையும் மத நல்லிணக்கத்த்தையும் பாதுகாப்போம் என்று அனைத்து அரசியல் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, சிபிஐ (எம்-எல்) ஆகிய கட்சிகள் இதுதொடர்பாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

அதில், “திருப்பரங்குன்றத்தை மையமாகக் கொண்டு மதவெறி சக்திகள் பதற்றத்தை ஏற்படுத்த முயன்றாலும்,மதுரை மாவட்ட மக்கள் தொடர்ந்து அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணி வருகின்றனர். அதேபோல், இந்த ஆண்டும் மதவெறி சக்திகளின்ஆத்திரமூட்டல் மற்றும் திசைதிருப்பும் முயற்சிகளுக்கு இரையாகாமல், அனைவரும் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் பாதுகாக்கவேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளன.திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழக அரசு சீராய்வு மனுதாக்கல் செய்துள்ளதை வரவேற்றுள்ள அரசியல் கட்சிகள், மேலும், கார்த்திகைத் தீபத் திருநாளான இன்று (நவ. 24), திருப்பரங்குன்றம் மலையில்வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே, கோவில் நிர்வாகத்தின் சார்பில் மரபுப்படி தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

விசாரணைக்கு வராத சீராய்வு மனுதிருப்பரங்குன்றம் மலையில் உள்ள நில அளவைத் தூணில், நிபந்தனைகளுடன் இந்த ஆண்டு மட்டும்தீபம்ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழகஅரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இடைக்காலஉத்தரவைப் பிறப்பித்தஉச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை அலுவலில் இல்லை. இதனால், மனுவை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு அந்த அமர்விடம் முறையிட முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் முறையிடுவது குறித்து தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யுடன், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் தலைமைசெயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் சட்டத்துறை அமைச்சர்சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட் டோர் பங்கேற்றதாக தெரிகிறது.

நவம்பர் 24-ஆம் தேதி குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால், தலைமை நீதிபதியை அணுகினாலும் மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.மத நல்லிணக்கக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்இந்நிலையில், திருப்பரங்குன்ற த்தில் வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் இடத்தின் மரபை மாற்றக் கூடாது என்று வலியுறுத்தி, மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பினர் சார்பில் தல்லாகுளம் உலகத் தமிழ்ச் சங்கக் கட்டடம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ்,சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்-எல்), விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும்ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பதற்றத்தை ஏற்படுத்த மதவெறி சக்திகள் முயற்சிஇதனிடையே தர்கா அருகிலுள்ள நில அளவைத் தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று தமிழக இந்து மகா சபா பெயரில் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அகில பாரத அனுமன் சேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட மதவெறிஅமைப்புகளைச் சேர்ந்தவர்கள், நில அளவைத் தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறி, அரை லிட்டர் எண்ணெய்கூட ஊற்ற முடியாத நிலையில் உள்ள நில அளவைத் தூண் குழிக்கு, 5 லிட்டர் எண்ணெய், 16 கிலோ நெய், கற்பூரம், தீப்பெட்டி, தேங்காய், வாழைப்பழம் ஆகியவற்றை மேளதாளங் களுடன் எடுத்துச் சென்று கோவில் நிர்வாகத்தை மிரட்டும் முயற்சியில்ஈடுபட்டனர்.

ஜி.ஆர். சுவாமிநாதனைப் பாராட்டி சுவரொட்டிகள்திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகேயுள்ள நில அளவைத் தூணை ‘தீபத்தூண்’ எனக் குறிப்பிட்டு, அங்குதான் தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு, அமைதியாக இருந்த திருப்பரங்குன்றத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.

தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்குச் சென்றுள்ள நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்ஞாயிறன்று திடீரென திருப்பரங்குன்றத்துக்கு வந்து சாமி தரிசனம்செய்தார். அவரைப்பாராட்டி வரவேற்கும் வகையில், “திருப்பரங் குன்றம் மலை உச்சியில் தீபம்ஏற்றத் தீர்ப்பு வழங்கிய நீதியரசர்ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி” என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.இந்தச் சுவரொட்டிகளை ஒட்டிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

5,618 போலீசார் குவிப்பு

திருப்பரங்குன்றத்தில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் காவல்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மதுரை மாநகரக் காவல் ஆணையர் தலைமையில், 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள், 12 காவல் கண்காணிப்பாளர்கள், 8 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 57 உதவி ஆணையர்கள் மற்றும் டி.எஸ்.பி.க்கள், 132 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 5,618 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மலை உச்சியில் உள்ள தீபத்தூண், சிக்கந்தர் பாதுஷா தர்கா, காசி விஸ்வநாதர் கோவில், நெல்லித்தோப்பு, உச்சிப்பிள்ளையார் கோவில் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் மட்டும் 1,163 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதன்முறையாக ‘டிஎப்எம்டி’ கருவி மூலம் சோதனை

இதன்படி, மலை உச்சியில் உள்ள தீபத்தூண் பகுதியில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 187 போலீசாரும், தர்கா பகுதியில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 190 போலீசாரும், நெல்லித்தோப்பு பகுதியில் 282 போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காசி விஸ்வநாதர் கோவில் பகுதியில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 318 போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.

மேலும், காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுப் பகுதியில் 453 போலீசாரும், மலைக்குச் செல்லும் 9 வழித்தடங்களில் 163 போலீசாரும், கிரிவலப் பாதையில் 125 போலீசாரும், திருப்பரங்குன்றம் கோவில் பகுதியில் 110 போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மலைக்குச் செல்லும் வழியில் ‘டிஎப்எம்டி’ எனப்படும் நவீன சோதனைக் கருவி முதல்முறையாகப் பொருத்தப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.