மதவெறியர்களைப் புறக்கணித்தது திருப்பரங்குன்றம் கார்த்திகை தவிர்த்த நாட்களில் மலைமேல் தீபம் ஏற்ற முடியாது!
5 Dec 2025, 4:21 pm
<p><strong>மதவெறியர்களைப் புறக்கணித்தது திருப்பரங்குன்றம் கார்த்திகை தவிர்த்த நாட்களில் மலைமேல் தீபம் ஏற்ற முடியாது!</strong></p>
<p>கார்த்திகை தவிர்த்த மற்ற நாட்களில் மலை மேல் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை என்று திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகத்திடம் அக்கோவிலின் ஸ்தானிகப் பட்டர்கள் தெரிவித்துள்ளனர். கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும், சிவன் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. ஆனால், இவ்வாறு கிருத்திகை நாள் - நட்சத்திரம் எல்லாம் தேவையில்லை; நான் கூறினால் தீபம் ஏற்றியே ஆக வேண்டும் என்ற அடிப்படையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதனை மதவெறியர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, திருப்பரங்குன்றத்தில் கடந்த 3 நாட்களாக கலவர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மலை மேல் தீபம் ஏற்றுவது குறித்து திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில் பட்டர்கள் கோவில் நிர்வாகத்திற்கு விளக்கக் கடிதம் ஒன்றை அளித்துள்ளனர். அதில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது: இந்த ஆண்டும் 03-12-2025 புதன்கிழமை அன்று மாலை 6 மணியளவில் இத்திருக்கோவில் வழக்கப்படி திருக்கோவிலுக்குள் பால தீபம் ஏற்றிய உடன் அதே நேரத்தில் வழக்கமாக ஏற்றக்கூடிய உச்சிப்பிள்ளையார் கோவில் தீபமண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு பின்பு சுவாமி புறப்பாடாகி, பதினாறுகால் மண்டபம் எதிரே உள்ள இடத்தில் சொக்கப்பனை ஏற்றி சுவாமிக்கு ரக்ஷை சாற்றப்பட்டது, என்ற விபரத்தினை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் மற்ற நாட்களில் மலைமீது தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த விளக்கக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.</p>
