தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதவாத அரசியலை அரசு அனுமதிக்காது திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முந்தைய நிலையே தொடரும்!

6 Jun 2026, 9:14 pm
மதவாத அரசியலை அரசு அனுமதிக்காது திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முந்தைய நிலையே தொடரும்!

மதவாத அரசியலை அரசு அனுமதிக்காது திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முந்தைய நிலையே தொடரும்!

அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

மதுரை, ஜூன் 6- திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரத்தில், முந்தைய நிலையே தொடரும் என்று மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர் மல் குமார் கூறியுள்ளார்.

மதுரையில் சனிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மல் குமார், அவர்களின் பல்வேறு கேள்வி களுக்குப் பதிலளித்தார். அப்போது, திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்றும் நிகழ்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மக்கள் அமைதியையே விரும்புகின்ற னர் என்றும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்போ அல்லது பத்து ஆண்டு களுக்கு முன்போ இருந்த அமைதி யான சூழல் தொடர்ந்து நீடிக்க வேண் டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.

இதில் எந்த மாற் றுக் கருத்தும் இல்லை என்றும், மத வாத சக்திகள் இந்த விவகாரத்தை அரசியலாக்க அரசு ஒருபோதும் அனு மதிக்காது என்றும் கூறினார். தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஹார்ட் டிஸ்க் காணாமல் போன விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சர், காவல்துறை முழுமையாக விசா ரணை நடத்தி வருவதாகவும், முதல் வர் தினந்தோறும் இதைக் கண்கா ணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

காணாமல் போன தகவல்கள் என் னென்ன என்பது குறித்து கணக்கெ டுப்பு நடைபெற்று வருவதாகவும், ஹார்ட் டிஸ்க் கிடைத்தால் தரவுகளை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும் என்றும் கூறினார்.

செந்தில் பாலாஜி பேட்டி தொடர் பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, “யாரும் அவரை குற்றம் சாட்டாத நிலையில், அவர் ஏன் உடனடியாக இந்த விவகாரத்தில் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பது பல ருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்து கிறது. காவல்துறை விசாரணை நடை பெற்று வருகிறது.

விசாரணை முடிந்த பிறகே உண்மை வெளிவரும்” என்று தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பு கட்டாயமல்ல! முதலமைச்சர் செய்தியாளர் களை அடிக்கடி சந்திக்கவில்லை என்ற விமர்சனம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “மக்களை தினமும் சந்திப்பதுதான் முக்கியம்.

செய்தியா ளர்களை தினசரி சந்திக்க வேண்டும் என்பது கட்டாய நடைமுறை அல்ல. தேவையான நேரங்களில் அரசின் நிலைப்பாடுகள் மக்களுக்கும் ஊட கங்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றன” என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.