தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரணைக்கு தடை!

8 Apr 2026, 1:27 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரணைக்கு தடை!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்குகளில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது.

முன்னதாக, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், அடுத்த ஆண்டு இரு இடங்களிலும் தீபம் ஏற்றலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அதே விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வந்தார். மேலும், தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தீபத்தூண் போன்ற வடிவமைப்பில் தீபம் ஏற்றி ‘சனாதனம்’ குறித்து உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, ஒரு நீதிபதி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என குற்றம்சாட்டி, திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்குகளை அவர் விசாரிக்கக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ள நிலையில், தனி நீதிபதி விசாரணை நடத்த முடியாது என தெரிவித்தது. மேலும், இதுவரை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இதனுடன், இனி இந்த விவகாரம் தொடர்பான எந்த வழக்கையும் அவர் விசாரிக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.