திருநின்றவூரில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் ஆய்வு
7 Oct 2026, 2:07 am

திருநின்றவூரில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் ஆய்வு

அம்பத்தூர், அக். 6-திருநின்றவூர் நகராட்சிப் பகுதிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கையாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும்பணிகளைச் செங்கல் பட்டு மண்டல நகராட்சி களின் நிர்வாக இயக்கு நர் மாரிச்செல்வி செவ்வா யன்று (அக். 6)ஆய்வு செய்தார்.

நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் மதுசூதனன் ரெட்டி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச.கவிதா ஆகியோரின் உத்தர வின்பேரில், நகராட்சி ஆணையர் கீர்த்தனா மற்றும் பொறியாளர் அ.பு.குமார் மேற்பார்வையில் 27 வார்டுகளிலும் வடி கால் தூர்வாரப்பட்டு வருகிறது. குறிப்பாக ஈசா ஏரியிலிருந்து 2 கி.மீ தொலைவிற்கு பொக்லைன் இயந்திரம் மூலம் பணிகள் நடைபெறுகின்றன.

இப்பணிகளை ஆய்வு செய்த நிர்வாக இயக்குநர், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். மேலும், மழையால் மரங்கள் விழுந்தால் அவற்றை அகற்றத் தேவையான உப

கரணங்களைத் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தினார். முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளைச் சிறப்பாகச் செய்த நகராட்சி ஆணையர், பொறியாளர்மற்றும் ஊழியர்களை அவர் பாராட்டினார்.