முந்தய பக்கம்

மதுக்கடையை அகற்றக் கோரி மாதர் சங்கம் கையெழுத்து இயக்கம்

21 Jul 2026, 11:48 pm
மதுக்கடையை அகற்றக் கோரி மாதர் சங்கம் கையெழுத்து இயக்கம்
<p><strong>மதுக்கடையை அகற்றக் கோரி மாதர் சங்கம் கையெழுத்து இயக்கம்</strong></p><p>திருநின்றவூரில் பள்ளி, மருத்துவமனை மற்றும் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள அரசு மதுபானக் கடைகளை அகற்ற வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கக் கோரி நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட தலைவர் ப.சசிகலா, செயலாளர் ஏ.பத்மா, மாநில குழு உறுப்பினர் சரவணசெல்வி, துணைத் தலைவர் இ.மோகனா, பொருளாளர் ராஜி, கிளை நிர்வாகிகள் திலகா, சுஜாதா, தங்கரத்தினம், சிஐடியு நிர்வாகிகள் ஜெயராமன், ராமசாமி, கணேசன், வசந்தன் மற்றும் சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஏ.பச்சையம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram