சென்னை விரைவு செய்திகள்
21 Dec 2025, 3:21 pm

திருநாவலூர் கூட்டுறவு நகைக்கொள்ளை: விவசாயிகள் போராட்டம்

கள்ளக்குறிச்சி, டிச.21- திருநாவலூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை அடகு வைத்த 493 விவசாயிகளின் 1790 சவரன் நகைகள் 2010-ஆம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து வந்தாலும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் என்பதால் வழக்கு காலம் கடத்த ப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. கூட்டுறவுத் துறை அதிகாரிகளும் உதவி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டப் பட்டுள்ளது. சிபிஎம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் விவசாயிகளுக்கு ஆதரவாக 22 வகையான போராட்டங்களை நடத்தியுள்ளன. 11 முறை பேச்சுவார்த்தை கள் நடந்து ஒப்பந்தங்கள் போடப்பட்டாலும் விவசாயி களுக்கு நகைகள் திரும்ப வழங்கப்படவில்லை. இந்நிலையில், வரும் ஜனவரி 5, 2026 அன்று சென்னை யில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவல கம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை அனல்மின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க வாலிபர் சங்கம் கோரிக்கை

சிதம்பரம், டிச.21- பரங்கிப்பேட்டையில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் உள்ளுர் மக்களுக்கு வேலை வழங்க வாலிபர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிதம்பரம் அருகே கிள்ளையில் பரங்கிப் பேட்டை தெற்கு ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றிய ஒருங்கி ணைப்பாளர் பால.முரளி தலைமை தாங்கி னார். ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் சதிஷ் வரவேற்றார். சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பி னர் எஸ். அறிவழகன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டத் தலைவர் வினோத்குமார், செயலாளர் சின்னத்தம்பி ,பொருளாளர் கலைவாணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிர்வாகிகள் தேர்வு 11 ஒன்றியக்குழுவின் தலைவராக சதிஷ், செயலாளராக பால.முரளி, பொருளாள ராக சிவலோகம் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். மாநாட்டில் பரங்கிப்பேட்டையில் இயங்கும் தனியார் மின் நிலையத்திற்கு உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும், கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் மருத்து வர்களை பணியமர்த்த வேண்டும், தீத்தாம்பாளையம் மக்களுக்கு ஒப்படைப்பு பட்டாவை அளந்து கொடுக்க வேண்டும், நஞ்சமகத்து வாழ்கை கிரா மத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.