தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தனியாருக்கு கொடுக்கப்பட்ட தூய்மைப்பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

26 Jun 2026, 1:36 am
தனியாருக்கு கொடுக்கப்பட்ட தூய்மைப்பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

தனியாருக்கு கொடுக்கப்பட்ட தூய்மைப்பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

அவிநாசி, ஜூன் 25- தனியாருக்கு கொடுக்கப்பட்ட தூய்மைப் பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என திருமுருகன்பூண்டி நகர்மன்றக் கூட்டத் தில், வார்டு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகர்மன்றக் கூட்டம், நகர்மன்றத் தலைவர் குமார் தலைமையில் புதனன்று நடைபெற் றது. துணைத்தலைவர் ராஜேஸ்வரி, ஆணை யர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் சுப்பிரமணி யன், தேவராஜன் ஆகியோர் பேசுகையில், தூய்மைப் பணியில் அவுட்சோர்சிங் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண் டும்.

இந்த முறையை நடைமுறைப்படுத்திய பிறகு, இஎஸ்ஐ அட்டை இல்லாததால் மூன்று தொழிலாளிகள் மருத்துவப்பயன்கள் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர், என்றனர். இதே கோரிக்கையை நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் முன்வைத் ததை தொடர்ந்து, அவுட்சோர்சிங் முறை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சுப்பிரமணியம் பேசு கையில், ராக்கியாபாளையம் அரசுப்பள்ளி யினை தரம் உயர்த்த வேண்டும்.

கழிவுநீர் சுத் திகரிப்பு தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது; ஆனால், அதில் தண்ணீர் மற்றும் சுத்தம் செய்வதற்கான போதிய நபர்கள் நிய மிக்கப்படாமல் இருந்து வருகிறது. எனவே, இதனை முறையாக பராமரித்து, முறையாக தண்ணீர் வெளியேற வழிவகை செய்ய வேண் டும். தெருவிளக்குகளை சீரமைத்து தர வேண்டும். பூங்காக்களை பராமரிக்க வேண் டும்.

நகராட்சி முழுவதும் உள்ள மயானங் களை தூய்மைப்படுத்த வேண்டும். தற்போது வரை தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த முறையில் பணியாற்றி வருகின்றனர். மூன்று வருடங்களாக இஎஸ்ஐ பிஎப் பிடித்தம் செய்யப்படாமல் இருந்து வருகிறது. ஒப்பந் தம் முடிவதற்குள் அதனை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும், என்றார்.

இதன்பின் தேவராஜன் பேசுகையில், நக ராட்சி மன்ற பொருள் வாசிக்கும் பொழுது, முறைப்படியாக வாசிக்கப்பட வேண்டும்.

ஒரு பொருள் விட்டு விட்டு வாசிக்கப்படு கிறது. மன்ற பொருளில் கொடுக்கப்படும் தீர் மான நகல்கள் பெரிதும் தெரிவதில்லை.

அனைவருக்கும் தெரியும்படி கொடுக்க வேண்டும். நகராட்சி ‘மூன்று ஸ்டார்’ என்ற முறையில் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக இருக்கிறது. ஆனால், நகராட்சி முழுவதும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அதேபோல நகராட்சிகளில் குழாய்கள் அமைக்கும் பணியின் போது, தார்ச்சாலைகள் தோண் டப்பட்டு அந்த இடத்தில் பேட்ச் ஒர்க்குகள் நடைபெறுகிறது.

அப்போது, சிமெண்ட் கல வைகள் போடப்பட்டதால் வாகன ஓட்டிக ளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர்.

சேதமடைந்த தார்ச்சாலைக்கு மீண்டும், தார்ச் சாலை போன்றவை அமைத்து தர வேண்டும், என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.