தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2-ஆம் மண்டலப் பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு: கடைமடை வரை நீர் சேர விவசாயிகள் கோரிக்கை!

3 hours before
2-ஆம் மண்டலப் பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு: கடைமடை வரை நீர் சேர விவசாயிகள் கோரிக்கை!

2-ஆம் மண்டலப் பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு: கடைமடை வரை நீர் சேர விவசாயிகள் கோரிக்கை!

உடுமலை, நவ. 7– திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டலப் பாசனத்திற்குப் புதனன்று தண்ணீர் திறக்க;gபட்டது. இந்நிலையில், தண்ணீர், கடைமடைப் பகுதிகள் வரை முழுமையாகச் சென்றடைவதைப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துகுறித்து விவசாயிகள் கூறுகையில், அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது மகிழ்ச்சியளித்தாலும், அது முறையாக அனைத்துப் பாசன நிலங்களுக்கும் சென்றடைந்தால்தான் முழுமையான பலன் கிடைக்கும். கால்

வாய்களின் தொடக்கப் பகுதிகளில் நீரைப் பயன்படுத்தி, கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படுவதைத் தடுக்க அதகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பாசனக் கால்வாய்களில் அனுமதியின்றி முறைகேடாகத் தண்ணீர் எடுப்பதைத் தடுக்கப் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும். முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார்கள் வரும் வரை காத்திருக்காமல், பாசனக் காலம் முழுவதும் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவதே இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாகும்.

நீர் இழப்பை ஏற்படுத்தும் அடைப்புகள் மற்றும் சேதங்களை உடனுக்குடன் சரிசெய்து, கடைமடை விவசாயியின் நிலம் வரை தண்ணீர் சென்று சேர்வதைப் பொதுப்பணித்துறையும் மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.