முந்தய பக்கம்

திமுக கூட்டணியிலேயே விசிக தொடர்கிறது! திருமாவளவன் விளக்கம்

18 May 2026, 10:40 pm
திமுக கூட்டணியிலேயே விசிக தொடர்கிறது! திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியிலேயே விசிக தொடர்கிறது! திருமாவளவன் விளக்கம்

சென்னை, மே 18 - வேளச்சேரியில் செய்தி யாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.

திருமா வளவன், திமுக கூட்டணி யிலேயே விசிக தொடர்வதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் முதல்வர் ஆவது எளிதல்ல என்பது தனக்கு தெரியும் என்று கூறிய அவர், பாஜக ஆதரவு கட்சி என தவெகவை விமர்சித்ததில் தனக்கு இப்போது மாற்றுக் கருத்து இல்லை என்றும் தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறாது என்று முன்னரே கூறியிருப்பதாகவும் திருமாவளவன் சுட்டிக்காட்டினார்.

குடியரசுத் தலைவர் ஆட்சியை தடுக்கவும், மீண்டும் தேர்தல் வந்துவிடாமல் இருக்கவுமே தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்தார்.

தன்னை முதல்வராக்குவதற்காக, திமுக அல்லது அதிமுகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை; சில நலம் விரும்பிகளே அவ்வாறு பேசினர் என்றும், கிசுகிசுக்கள் அடிப்படையிலேயே தான், தானும் அன்று பேசியதாக குறிப்பிட் டார்.

இரண்டு தொகுதிகளை மட்டும் வைத்துக் கொண்டு யாரிடமும் பேரம் பேசவில்லை என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram