முந்தய பக்கம்

திருமங்கலத்தில் ஆடு விற்பனை அமோகம் ரூ.7 கோடிக்கு விற்பனை

22 May 2026, 9:22 pm
திருமங்கலத்தில் ஆடு விற்பனை அமோகம் ரூ.7 கோடிக்கு விற்பனை

திருமங்கலத்தில் ஆடு விற்பனை அமோகம் ரூ.7 கோடிக்கு விற்பனை

மதுரை, மே22- இஸ்லாமியர்களின் முக்கிய பண்டி கைகளில் ஒன்றான பக்ரீத் மே 28 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு பிரியாணிக் காக தமிழ்நாடு முழுவதும் ஆடு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் திருமங்க லம் ஆட்டுச் சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியா பாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். அங்கு குறுகிய நேரத்தில் ரூ.7 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக வியாபாரி கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். செஞ்சி, ராணிப்பேட்டை அதே போல விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார ஆட்டுச்சந்தையில் சுமார் 15 ஆயிரம் ஆடுகள் 4 கோடி ரூபாய் வரை விற்பனையானதாக ஆடு வளர்ப் போர், வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவி த்தனர். அங்கு வெள்ளாடுகள் 15 ஆயி ரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் வரையிலும் செம்மறி ஆடுகள் ஜோடி 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை விற்பனையான தாக வியாபாரிகள் தெரிவித்தனர். குறிப் பாக ராணிப்பேட்டை வார சந்தையில் 5 மணி நேரத்தில் ரூ. 3 கோடிக்கு ஆடு கள் விற்பனையாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram