தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘’தமிழர்கள் அறிவின் அடையாளம் திருக்குறள்’’ திருப்பூர் விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு

22 Jan 2026, 2:57 pm
‘’தமிழர்கள் அறிவின் அடையாளம் திருக்குறள்’’ திருப்பூர் விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு
<p><strong>&lsquo;&rsquo;தமிழர்கள் அறிவின் அடையாளம் திருக்குறள்&rsquo;&rsquo; திருப்பூர் விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு</strong></p> <p>திருப்பூர், ஜன.22- தமிழர்கள் அறிவின் அடையாளம் திருக்குறள் என்று திருப்பூர் விழாவில் கவிஞர் வைரமுத்து பேசினார். திருப்பூர் மாவட்ட வெற்றித் தமிழர் பேரவை சார்பில் கவிஞர் வைரமுத்து எழுதிய வள்ளுவர் மறை வைரமுத்து உரை என்ற நூலில் கையொப்பத் திரு விழா திருப்பூர் காந்திநகரில் உள்ள ஏ. வி.பி. கல்வி அறக்கட்டளை அரங்கத் தில் வியாழனன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவ னர் நாகராஜன் தலைமை தாங்கினார். ஏ. வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். வெற்றித் &nbsp;தமிழர் பேரவை அமைப்பாளர்கள் ஜீவா னந்தம், ஸ்ரீகுமார், சதீஷ்குமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். வேலவன் மெட்ரிக், விகாஸ் வித்யாலயா, தி பிரண்ட்லைன் அகாடமி, லிட்டில் கிங்டம், ஏ.ஜி. கலை அறிவியல் கல்லூரி, டி.கே.டி. கல்வியியல் கல்லூரி, ஜெயந்தி மெட்ரிக் உள் ளிட்ட பள்ளி, கல்லூரிகளின் தாளா ளர்கள், நிர்வாகிகள் சிறப்பு அழைப்பா ளர்களாக கலந்து கொண்டனர். இதில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் 1000 பேருக்கு அவர் எழுதிய புத்தகத்தில் கையொப்பமிட்டு, வழங்கி சிறப்புரை யாற்றினார். &nbsp;அப்போது அவர் கூறியதாவது, திருக்குறளுக்கும், மற்ற நூல்களுக்கும் &nbsp;வேறுபாடு உள்ளது. மற்ற நூல்களில் &nbsp;உள்ள கதை, கட்டுரைகள் வாசிப்பதற் காகும். ஆனால் திருக்குறள் வாசிப்ப தற்கு மட்டுமல்ல. நீங்கள் வசிப்பதற் கும், வாழ்வதற்கும் ஆகும். கடந்த மாதம் இருந்தவர்கள் இந்த மாதம் இல்லை. இந்த உலகை ஆண்ட தலை வர்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் நினைக் கப்படுவதில்லை. குறிப்பாக இந்த &nbsp;நாட்டை ஆண்ட முதல் அமைச்சர்கள் &nbsp;கூட 10 ஆண்டுகளில்ஒரு தலைமுறை யால் மறக்கப்படுகிறார்கள். நாட்டின் தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர் கள் மறக்கப்படுகிறார்கள். தற்போது மனிதன் 3 நாட்கள் மட்டுமே நினைக்கப் படுகிறான். அதிகபட்சமாக 7 ஆவது நாள் காரியம் முடியும் வரை உறவுகள் &nbsp;நினைக்கிறார்கள். &nbsp;இந்த தொழில்நுட்பம் அனைவரை யும் மறக்க வைக்கிறது. ஆனால் ஒரு &nbsp;புலவர், ஒரு தமிழர் எழுதிய தமிழ் ஈராயி ரம் ஆண்டுகளாக உயிரோடு இருக்கி றது என்றால் அது திருக்குறள் ஆகும். &nbsp;வள்ளுவனுடைய சொல். இந்த உலகத் தில் சொத்தை விட்டு செல்கிறவன் தன் னுடைய மகனாலேயே மறக்கப்படுகி றான். எனவே மாணவர்கள் காலந்தோ றும் நினைக்கப்படுவதற்கு இந்த பூமி யில் எதையாவது விட்டு செல்ல வேண் டும். முத்துக்களை விட்டுச் செல்லாமல், அறிவை, அன்பை விட்டுச் செல்ல வேண்டும். அடுத்த தலைமுறைக்கு பயன்படக்கூடியதை விட்டுச் செல்லுங் கள். அப்படி சென்றால் நீங்கள் நினைக் கப்படுவீர்கள். &nbsp;ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய குறள் தற்போதைய சூழலுக்கு பொருந்துகிறது. பொருத்தப்பாடு என் கிற தத்துவம்தான் நிற்கும். பொருத்தம் &nbsp;இல்லாத மதம், கட்சி, சமயம் அழிந்து &nbsp;போகும். திருக்குறளும், திருவள்ளுவ ரும் பொருத்தப்பாடாக உள்ளனர். ஆசி யர்களும், பெற்றோரும் மாணவர்களை &nbsp;சந்தேகப்படாதீர்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். எந்த &nbsp;புற்றில் எந்த பாம்போ என்று சந்தேகப் படாமல், எந்த பூவில் எந்த தேனோ என்று &nbsp;கொண்டாடி பாருங்கள். மாணவ செல் வங்கள் உயர்ந்த நிலையை அடைவார் கள். &nbsp;தமிழர்களுக்கு நில அடையாளம், கடல் அடையாளம், மலை அடையா ளம், நதி அடையாளம் உள்ளது. ஆனால் தமிழர்கள் அறிவின் அடையா ளம் திருக்குறளாகும். இது தற்போது வரை உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கி றது. இவ்வாறு அவர் பேசினார். &nbsp; நிகழ்ச்சியில் திருப்பூர் ஏ.வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஏ.வி.பி. மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளி &nbsp;மாணவ, மாணவிகள் உள்பட பல்வேறு &nbsp;பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், ஆசி ரியர்கள், வெற்றித் தமிழர் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.