தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருக்குறள் தமிழர்களுக்கான நூல் மட்டுமல்ல மனித சமுதாயத்திற்கான வாழ்வியல் நெறிமுறை

20 Jan 2026, 2:46 pm
திருக்குறள் தமிழர்களுக்கான நூல் மட்டுமல்ல மனித சமுதாயத்திற்கான வாழ்வியல் நெறிமுறை
<p><strong>திருக்குறள் தமிழர்களுக்கான நூல் மட்டுமல்ல மனித சமுதாயத்திற்கான வாழ்வியல் நெறிமுறை</strong></p> <p>திருப்பூர், ஜன.20- திருக்குறள் தமிழர்களுக் கான நூல் மட்டுமல்ல, அது கல்விக் கோட்பாடுகளை தாண்டிய உலக மனித சமு தாயத்திற்கான வாழ்வியல் நெறிமுறை என குறளாசிரி யர் மாநாடு முனைவர் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்தார். தமிழ் வளர்ச்சித் துறை யின் சார்பில் குறள் வாரவிழா &nbsp;2026 குறளாசிரியர் மாநாடு செவ்வாயன்று திருப்பூர் அரசு &nbsp;மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை கலையரங்கில் நடைபெற்றது. இதில், &nbsp;தமிழ்நாடு அரசின் திருக்குறள் பணிகள் முனைவர் வீ.ப. ஜெயசீலன் பேசுகையில், சமூகத்திற்கு எப்போதும் வழிகாட்டும் உயர்ந்த தத்துவங்கள் அவசியமானவை. அந்த தத்துவங்களை இலக்காகக் கொண்டு &nbsp;தனி மனிதன், சமூகம், நிறுவனங்கள், அரசு கள் செயல்படும் போது அனைவருக்குமான உயர்வு சாத்தியமாகிறது. அனைவருக்கும் சமமான வாய்ப்புகள், யாரையும் தாழ்வுறுத் தாத அணுகுமுறை, இயற்கை மற்றும் பொது வளங்களை சமமாகப் பகிர்ந்தளித்தல், மனத்துக்கண் மாசிலன் ஆதல் போன்ற மாறாத நெறிகளின் அடிப்படைகளை உல கிற்கு வழங்கியவர் திருவள்ளுவர். திருக்கு றள் தமிழர்களுக்கான நூல் மட்டுமல்ல. அது &nbsp;கல்விக் கோட்பாடுகளை தாண்டிய உலக &nbsp;மனித சமுதாயத்திற்கான வாழ்வியல் நெறி முறை. அதனால் தான் மொழி, நாடு, இனம் என்ற எல்லைகளைத் தாண்டி உலகளாவிய வாழ்வியல் இலக்கணமாக திருக்குறள் போற்றப்படுகிறது. இந்த உயர்ந்த தத்து வங்களை தலைமுறை எங்கும் கடத்தி சிறந்த சமூகத்தை உருவாக்குவது நமது கட மையாகும். அந்த நோக்கத்தில் ஆசிரியர்க ளும், அரசு அலுவலர்களும் இந்த உணர்வை &nbsp;ஏற்றுக்கொண்டால் எதிர்கால சமுதா யத்திற்கு நன்மை பயக்கும். அத்தகைய லட்சி யத்தோடு ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவ லர்களுக்கான குறளாசிரியர் மாநாடு வடிவ மைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆணையாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை &nbsp;(பயிற்சி) ஆனந்தகுமார், மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே, மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோண்மணி, &nbsp;மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள் மற்றும் துறை &nbsp;சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண் டார்கள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.