தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருக்காவூரிலிருந்து
27 May 2026, 9:26 pm
<p>தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருக்காவூரிலிருந்து மெலட்டூர் புதுபாலம் வரையிலான 6 கிலோ மீட்டர் தூரம் வெட்டாற்றில் நாணல் புற்கள் மண்டி நீரின் போக்கைத் தடுக்கிறது. இதனால் வாய்க்கால் பாசனத்திற்கு வழியில்லாமல் போனது. கடந்த 25 ஆண்டுகளாக தூர்வாராத வெட்டாறு இந்த ஆண்டாவது தூர்வாரப்படுமா என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதி விவசாயிகள் உள்ளனர்.</p>
