திற்பரப்பு அருவியில் புனரமைப்புக்கு ரூ.4.35 கோடி ஒதுக்கீடு நான்கு வருடமாக கட்டியும் பாதியில் நிற்கும் பணி
29 May 2026, 10:57 pm
<p><strong>திற்பரப்பு அருவியில் புனரமைப்புக்கு ரூ.4.35 கோடி ஒதுக்கீடு நான்கு வருடமாக கட்டியும் பாதியில் நிற்கும் பணி</strong></p><p>நாகர்கோவில்.மே.29- திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்காக அமைக்கப்பட்ட கட்டிடங்களை புனரமைக்கும் பணிக் காக ரூபாய் 4.35 கோடி ஒதுக்கி நான்கு வருடமாகியும் இதுவரை பாதி பணி நடந்துள்ளது. அதுவும் தரம் குறைந்த பொருட்களையே பயன்படுத்தி உள்ளனர். இது குறித்து பத்மநாபபுரம் தொகுதி எம்எல்ஏ ஆர். செல்வ சுவாமி அவரிடம் மக்கள் புகார் அளித்த னர். அவர் நேரில் அங்கு சென்று ஆய்வு நடத்தினார். ஆய்வு நடத்திய அவரிடம் அங்குள்ள ஊழியர்கள் ,அதிகாரி கள் கூறியதாவது, இந்த பணிகள் அனைத்தும் சுற்றுலாத்துறை மூலமே நடக்கிறது. நன்றாக இருந்த தரையை உடைத்து விட்டு அதில் புதிய தரை அமைத்து உள்ளனர். தரையை அமைக்கும் முன் தண்ணீர் பைப், தரைவழி மின் இணைப்பு கொடுக்கப்பட வில்லை அது இனி தான் நடக்கும் அப்படி என்றால் புதிதாக அமைக்கப்பட்ட அனைத்தையும் உடைத்து எடுக்க வேண்டும் மறுபடி யும் புதிதாக போட வேண்டும் அதற்கான செலவு அதிகரிக்கும். மேலும் இங்கு பயணிகள் பயன் பாட்டிற்காக புதிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.அதில் ஆண் களுக்கு எட்டு ,பெண்களுக்கு ஒன்பது அறைகள் என கட்டப் பட்டுள்ளது.இதற்கு இன்னும் இணைப்புகள் ஏதும் கொடுக்கப் படவில்லை. தண்ணீர் வசதி கொடுக்கப்படவில்லை மின் வசதி கொடுக்கப் படவில்லை. குறிப்பாக அந்த புதிய கட்டி டத்திற்கு போடப்பட்டிருக்கும் கதவு கள் மிகவும் மோசமான நிலையில் தரமற்றதாக உள்ளது..மேலும் சுற்றுலா பயணிகள் உடை மாற்று வதற்கான அறைகளும் கட்டப் பட்டு அதுவும் பயன்பாட்டுக்கு வர வில்லை. இதை போல் அனைத்து வேலைகளும் தரமற்றதாகவே உள்ளது என்றனர். இதனை கேட்ட எம்எல்ஏ ஆர் செல்வ சுவாமி புதிதாக கட்டப் பட்டுள்ள கழிப்பிடங்கள்,அங்கு அமைக்கப்பட்டுள்ள கதவு , சுற்றுலா பயணிகள் உடை மாற்றும் அறைகளில் ஆய்வு நடத்தினார். அப்போது எம் எல் ஏ ஆர் .செல்வ சுவாமி தெரிவித்ததாவது, தமிழக சுற்றுலாத்துறை மூலம் ரூபாய் 4.35 கோடி கடந்த 2022 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. பணம் ஒதுக்கப்பட்ட நிலையில் திற்பரப்பு அருவி மேம்பாட்டிற்கான எந்த ஒரு பணியும் கடந்த நான்கு ஆண்டாக நடக்காமல் இருந்து உள்ளது. இதில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகை தந்த போது அவசர அவசரமாக பணி நடந்துள்ளது. இதில் பாதி பணி நடந்துள்ளது.சுமார் 2 கோடி ரூபாய் செலவு செய்து உள்ளனர்.ஆனால் அங்கு செய்யப் பட்ட பணிகள் அனைத்தும் தரமற்ற தாக இருக்கிறது.குமரி மாவட்டத் தில் சுற்றுலா தலத்தில் முக்கிய மானதாக விளங்கும் திற்பரப்பு அரு விக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்ற னர். எனவே விரைவில் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும்.ஏற்கனவே தரமற்ற பொருட் களைக் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளதை அகற்றிவிட்டு தரமான தாக அமைக்க வேண்டும்.உபரி செலவுகள் இருந்தாலும் அதை சுற்றுலா துறை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரி வித்தார். இந்நிகழ்ச்சியில் திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன் ரவி, துணைத் தலைவர் எஸ்.சி ஸ்டா லின்தாஸ். சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.அண்ணா துரை, ஆர்.ரவி என்.ரெஜீஸ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
