தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திற்பரப்பு அருவியில் ரூ. 4.2 கோடியில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பணிகளை விரைந்து முடிக்க ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ அறிவுறுத்தல்

23 May 2026, 10:39 pm
திற்பரப்பு அருவியில் ரூ. 4.2 கோடியில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள்  பணிகளை விரைந்து முடிக்க ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ அறிவுறுத்தல்
<p><strong>திற்பரப்பு அருவியில் ரூ. 4.2 கோடியில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பணிகளை விரைந்து முடிக்க ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ அறிவுறுத்தல்</strong></p><p>நாகர்கோவில், மே 23 - திற்பரப்பு அருவியில் ரூ. 4.2 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை - தரமாக, விரைந்து முடிக்குமாறு, சிபிஎம் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி கேட்டுக் கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி, சனிக்கிழமை (மே 23) அன்று, மூன்றாவது நாளாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பயணத்தை திற்பரப்பு அருவிப் பகுதியில் துவங்கினார். அப்போது வியாபாரிகளும் பொதுமக்களும் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து கவலை தெரிவித்தனர். இதையடுத்து, உடனடியாக அருவிப் பகுதிக்குச் சென்ற ஆர். செல்லசுவாமி, சுற்றுலா பயணிகளிடம் குறைகளைக் கேட்டதுடன், புதிய சுகாதார வளாகப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சுற்றுலாத்துறை அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு, பணிகளை தரமாக விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமியுடன், திற்பரப்பு பேரூராட்சித் தலைவர் பொன். ரவி, துணைத் தலைவர் எஸ்.சி. ஸ்டாலின் தாஸ், வார்டு உறுப்பினர்கள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.