மாத்தி யோசிங்க நயினார்!
11 Apr 2026, 5:30 am

மாத்தி யோசிங்க நயினார்!

தேர்தல் களம் சூடுபிடித்தாலே, தோல்வி பயம் கொண்ட வேட்பாளர்கள் முதலில் கையை நீட்டுவது அதிகாரிகள் மீதுதான். அந்த வரிசையில் இப்போது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், 'வருவாய்த் துறையும், காவல் துறையும் திமுக-வுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது' எனப் புகார் கூறியுள்ளார்.

தேர்தல் அதிகாரி திமுக ஏஜென்ட் போலச் செயல்படுகிறார். காவல்துறை அதிகாரிகள் திமுக-வை ஜெயிக்க வைக்கத் துடிக்கிறார்கள்' என நயினார் புலம்புவதைப் பார்த்தால், தோல்வி பயம் அவரைத் தொற்றிக்கொண்டது தெரிகிறது. ஒருபடி மேலே போய், 'அதிமுக திட்டங்களைக் காப்பி அடிப்பதில் திமுக ஒரு கேடுகெட்ட' என அவர் கூறியுள்ளார்.

ஏற்கெனவே அதிமுக-வில் இருந்த அனுபவத்தில் அவர் இதனைப் பேசுகிறாரோ என்னவோ! ஆனால் நயினார் நாகேந்திரன் ஒரு விஷயத்தைச் சௌகரியமாக மறந்துவிட்டார். 'அதிகாரிகள் திமுக-வுக்கு சாதகமாக இருக்கிறார்கள்' என அவர் புகார் சொல்லும் போதே, தில்லியில் உத்தரவுப்படி தமிழகத்தின் தலைமைச் செயலாளரையே மாற்றியது யார் என்பது ஊருக்கே தெரியும்.

கையில் ஒன்றிய அதிகாரம், தேர்தல் ஆணையம் என அனைத்தும் இருக்கும்போது, 'திமுக அதிகாரிகள் மூலமாக ஜெயித்துவிடும்' என நயினார் கூறுவது உலக மகா நகைச்சுவை. தனது பலவீனத்தை மறைக்க மற்றவர்கள் மீது பழிபோடும் பழைய வித்தையை நயினார் கையில் எடுத்துள்ளார். ஆனால், தமிழக வாக்காளர்கள் எதார்த்தத்தைப் புரிந்து வைத்துள்ளனர்.