கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
30 Nov 2025, 4:29 pm

திம்பம்: கார் கவிழ்ந்ததில் 6 பேர் காயம்

ஈரோடு, நவ.30- திம்பம் மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயம டைந்தனர். சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை யில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில், 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இதன் வழியாக தமிழக - கர்நாடகா மாநிலங்களுக்கிடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கர்நாடகா மாநிலம், மைசூருவைச் சேர்ந்த இனாயத் பாஷா என்பவர் குடும்பத்தினர் 6 பேருடன் நாகூர் தர்கா செல்வதற்காக திம்பம் மலைப் பாதை வழியாக சனியன்று காரில் சென்று கொண்டி ருந்தார். 2 ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத் தடுப் புச்சுவரை உடைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள 50 அடி ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது. இதுதொடர்பாக அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் காவல் துறையினர் மற்ற வாகன ஓட்டிகளின் உதவியுடன் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் பயணித்தவர்களில் 6 பேரும் காயமடைந்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

மழை, குளிரால் பொதுமக்கள் அவதி

சேலம், நவ.30- சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அவ் போது பெய்து வரும் சாரல் மழை, கடும் குளிரால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினர். சேலம் மாவட்டத்தில் சனியன்று காலை முதலே பல்வேறு இடங்களில் அவ்போது சாரல் மழை பெய்த தால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும், கடும் குளிர், பனி மூட்டம் காணப் பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதே போல ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி, வாழப்பாடி, தலைவாசல், வீரபாண்டி, எடப்பாடி அயோத்தியாபட்ட ணம், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்த மழை யால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி

தருமபுரி, நவ.30- பாலக்கோடு அருகே கிணற்றில் தவறி விழுந்து விவ சாயி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த மல்ல சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிவேல் (65). விவசாயி-யான இவர் கடந்த நவ.28 ஆம் தேதியன்று தனது விவசாயத் தோட்டத்துக்குச் சென்றவர், மாலையா கியும் வரவில்லை. இதனால் குடும்பத்தினர் தேடிச் சென்ற போது அவரை காணவில்லை. கிணற்றை பார்த்த போது மண் சரிந்து காணப்பட்டது. சந்தேகமடைந்து பாலக்கோடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தேடிப் பார்த்ததில் முனிவே லின் சடலத்தை கிணற்றிலிருந்து மீட்டனர். இதுகுறித்து பாலக்கோடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு

தருமபுரி, நவ.30- தருமபுரி அருகே இருசக்கர வாகனத்தின் மீது பிக்கப் வாகனம் மோதியதில், தந்தை மற்றும் மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம், இருமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார், தபால் துறையில் பணியாற்றி வரு கிறார். இந்நிலையில், ஞாயிறன்று அருண்குமார் தனது மகன்கள் திருஞானம் (13), திரௌபதி சக்தி (8) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் தருமபுரி நோக்கி சென்றுள்ளனர். அப்பொழுது செங்கல்மேடு அருகே அதிவேகமாக பின்னால் வந்த டாட்டா ஏசி பிக் வாக னம், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இவ்விபத் தில் அருண்குமார் மற்றும் மகன் திருஞானம் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். மேலும், மற்றொரு சிறுவன் திரௌபதி சக்தி படுகாயமடைந்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி யில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு மதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து ஏற்படுத்திய பிக்கப் வாகன ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில், கிருஷ்ணா புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கொள்ளளவை எட்டிய குந்தா அணை

உதகை, நவ.30- உதகை அருகே உள்ள குந்தா அணை முழு கொள்ள ளவை எட்டியுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்க ளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் ளது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள குந்தா அணை நீர் மின்சாரம் தயாரிக்க அணையில் நீர் தேக்கி தூக்கி வைக்கப்பட்டு நீர் மின்சாரம் தயாரிக்கப்படுகி றது. இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக செய்து வந்த மழையினால் 89 அடி உயரம் கொண்ட குந்தா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணையிலிருந்து இரண்டு மதகுகள் வழியாக 600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றங் கரையோரம் துணி துவைக்கவோ, குளிக்கவோ வேண் டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடும் பனி, மழையால் சாகுபடி பாதிப்பு ஒரு கிலோ மல்லிகை ரூ.6640க்கு விற்பனை

ஈரோடு, நவ.30- சத்தியமங்கலம் பகுதியில் மழை மற்றும் கடும் பனிப்பொழிவால் பூக்கள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால், மல்லிகைப் பூ விலை சனியன்று ரூ.6,640 ஆக அதிகரித்துள் ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. காலை நேரத்தில் பனிப்பொழிவும், பகல் நேரத்தில் மேகமூட்டமான காலநிலையும் நிலவுகிறது. இதற்கிடையே பகல் நேரத்தில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் பூக்கள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சத்தியமங்க லம், பவானிசாகர், செண்பகப்புதூர், தாண் டாம்பாளையம், கெஞ்சனூர் உள்ளிட்ட பகுதி களில் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகு படி செய்த மல்லிகைப் பூ மகசூல், ஒரு டன்னில் இருந்து 50 கிலோவாக குறைந்துள் ளது. வரத்து குறைவு காரணமாக சத்தியமங்க லம் பூ மார்க்கெட்டில் சனியன்று நடை பெற்ற ஏலத்தில் மல்லிகைப் பூக்களை வாங்க வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவி யது. இதனால் வெள்ளியன்று கிலோ ரூ.3 ஆயிரமாக இருந்த மல்லிகைப் பூ, சனியன்று ரூ.6,640 ஆக அதிகரித்துள்ளது. முகூர்த்த தினம் என்பதாலும், வரத்து குறைந்து, தேவை அதிகரித்துள்ளதாலும் பூக்கள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள தாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் அணையிலிருந்து 188 டிஎம்சி தண்ணீர் திறப்பு

சேலம், நவ.30- மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு இந்த ஆண்டில் இதுவரை 188 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி முதல் ஜனவரி 28 ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும். டெல்டா பாசனத்திற்காக 230 நாட்களுக்கு 330 டிஎம்சி தண்ணீர் தேவையுள்ளது. அதேசமயம் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தால் தண்ணீர் தேவையின் அளவு குறையும். இந்தாண்டில் மேட்டூர் அணையிலிருந்து இதுவரை டெல்டா பாசனத்துக்கு 188 டிஎம்சி தண்ணீர், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 7 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர் மழையால் கர்நாடகா அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் மூலம் இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு 309 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனியன்றுடன் சேர்த்து தொடர்ந்து 404 ஆவது நாளாக 100 அடிக்கு மேல் நீடிக்கிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு போதுமான அளவு இருப்பதால் வரும் ஜூன் 12 ஆம் தேதி குறித்த நாளில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.

ஒகேனக்கல் குடிநீர் வழங்க வலியுறுத்தல்

தருமபுரி, நவ.30- தொப்பூர் அருகே கருங்கல்லூர் கிராமத் திற்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள் ளனர். தருமபுரி ஒன்றியம், கோடுஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட கருங்கல்லுாரில் நூற்றுக் கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இக்கிராமத்தில் குடிநீர், தெரு விளக்கு, மின்சாரம் உட்பட அடிப்படை வசதி களின்றி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள் ளாகி வருகின்றனர். கடந்த 6 மாதங்களாக ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் இப்பகுதிக்கு வர வில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தி டம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் குடிநீருக்காக விவசாயக் கிணறுகளை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள் ளது. எனவே ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க வும், தெருவிளக்குகள் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கிராம பொதுமக்கள் வலியுறுத்தியுள் ளனர்.

ஜெய்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கம்

கோவை, நவ.30- கோவையிலிருந்து ஜெய்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப் பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவையிலிருந்து டிச.18, 25 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணிக் குப் புறப்படும் கோவை - ஜெய்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06181) சனிக்கிழமைகளில் மதியம் 1.25 மணிக்கு ஜெய் பூர் சென்றடையும். மறுமார்க்கமாக, ஜெய்பூரிலிருந்து டிச.21, 28 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.05 மணிக் குப் புறப்படும் ஜெய்பூர் - கோவை வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06182) புதன்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலானது திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணி குண்டா, கடப்பா, கூட்டி, கர்னூல் சிட்டி, காச்சிகுடா, நிஜாமா பாத், அகோலா, மாலிக்பூர், நசீராபாத், அஜ்மீர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள் ளது.