திம்மநத்தம் ஆதிதிராவிடர் மக்களின் சுடுகாடு பிரச்சனை மாற்று இடம் வழங்காமல் அகற்ற எதிர்ப்பு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு
8 Jun 2026, 9:57 pm

திம்மநத்தம் ஆதிதிராவிடர் மக்களின் சுடுகாடு பிரச்சனை மாற்று இடம் வழங்காமல் அகற்ற எதிர்ப்பு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு

உசிலம்பட்டி, ஜூன் 8- மதுரை மாவட்டம் உசி லம்பட்டி வட்டம் திம்மநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட திம்மநத்தம் கிராமத்தில் வசித்து வரும் ஆதிதிரா விடர் சமூகத்தைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மக்க ளால் கடந்த 75 ஆண்டு களுக்கும் மேலாக பயன் படுத்தப்பட்டு வந்த சுடு காடு தொடர்பான பிரச்சனை யில், நீதிமன்ற உத்தர வுக்கு எதிராக மேல்முறை யீடு செய்ய முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

சுடுகாடு நிலம் ஆக்கிர மிக்கப்பட்டுள்ள தாக தனி நபர் ஒருவரால் தொடரப் பட்ட வழக்கில், ஆக்கிர மிப்பை அகற்றுமாறு உயர்நீ திமன்ற மதுரை கிளை உத்தர விட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, நீதி மன்ற உத்தரவை அமல் படுத்த நடவடிக்கை எடுக்கப் படும் என உசிலம்பட்டி வரு வாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர். அத னடிப்படையில், திங்கள்கி ழமை உசிலம்பட்டி உதவி ஆட்சியரைச் சந்தித்து, பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் சுடுகாட்டை மாற்று இடம் வழங்காமல் அகற்றக்கூடாது என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தைத் தொட ர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில், உயர்நீதி மன்ற உத்தரவை அமல் படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், அதே நேரத்தில் கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், சம்பந்தப்பட்ட கிராம மக்கள் நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்யலாம் என்றும் அறி வுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டரீதியான உதவிகளை வழங்கி, நீதி மன்ற உத்தரவுக்கு தடை பெறும் நோக்கில் உயர்நீதி மன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில செயலாளர் செ.முத்துராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் பி.ரா மர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர்.பர்வதவர்த்தினி, ஒன்றிய குழு உறுப்பினர் எழில் அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.