மூதாட்டிகளை குறிவைத்த கொள்ளையன் பிடிபட்டான்!
5 hours before
<p><strong>மூதாட்டிகளை குறிவைத்த கொள்ளையன் பிடிபட்டான்!</strong></p><p> சேத்துப்பட்டு, ஜூலை 13- திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மற்றும் போளூர் பகுதிகளில் மூதாட்டிகளிடம் தண்ணீர் கேட்பது போல் நடித்து, மயக்க மருந்து தெளித்து நகைகளைப் பறித்த கொள்ளையனை காவல்துறையினர் 24 மணி நேரத்தில் கைது செய்தனர். குடியாத்தத்தைச் சேர்ந்த விஜய் (26) என்ப வர், லட்சுமி மற்றும் குப்பு ஆகிய இரு மூதாட்டிகளின் முகத்தில் ஸ்பிரே செய்து நகைகளைப் பறித்துத் தப்பினார். இது குறித்துப் புகாரளித்த நிலை யில், போளூர் டி.எஸ்.பி மனோகரன் தலைமையி லான தனிப்படை தீவிர விசாரணை மேற் கொண்டது. துரிதமாகச் செயல்பட்ட காவல்துறை, விஜய்யைக் கைது செய்து அவரிட மிருந்து 3 தங்க நகையை மீட்டனர். குற்ற வாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முதிய வர்களைக் குறிவைத்த கொள்ளையனை காவல்துறையினர் விரைந்து பிடித்தது அப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.</p>
