எஸ்.ஐ.ஆர் படிவங்களை கிழித்து முகத்தில் வீசுகிறார்கள்
18 Nov 2025, 3:21 pm
<p><strong>எஸ்.ஐ.ஆர் படிவங்களை கிழித்து முகத்தில் வீசுகிறார்கள்</strong></p>
<p>கோவை, நவ.18- சிறப்பு தீவிர வாக்காளர் பட்டி யல் திருத்தப்பணியில் போதிய கால அவகாசம் கொடுக்கப்படா ததை கண்டித்து சுமார் 2 ஆயிரத் திற்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் பணியை புறக் கணித்ததால், சிறப்பு தீவிர வாக்கா ளர் பட்டியல் திருத்தப்பணிகள் பாதிப்படைந்துள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப் பட்டுள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் பல் வேறு குழப்பங்கள், குளறுபடிகள் உள்ளதால் வாக்குரிமை பறிக்கப்ப டுமோ என்ற அச்சத்தில் பொது மக்கள் உள்ளனர். இந்நிலையில் போதிய கால அவகாசம், பயிற்சி களை வழங்காமல் கடுமையான நெருக்கடி மற்றும் பணிச் சுமையை ஏற்படுத்துவதாகக் கூறி தமிழகம் முழுவதும், வருவாய் ஊழியர்கள் உள்ளிட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 10 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற் பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவ லர்கள் எஸ்.ஐ.ஆர் பணிகளை புறக ணித்து வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய தமிழ்நாடு வருவாய் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் கூறிய தாவது, கோவை மாவட்டத்தில் உள்ள தலா ஒரு சட்டமன்ற தொகு திக்கு 300 நிலை அலுவலர்கள், 60 கண்காணிப்பாளர் என 3 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். தற் போது அவசரகதியில் செயல்படுத் தப்பட்டுள்ள இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி களால், கடும் நெருக்கடியை ஏற்ப டுத்துவதோடு பணிச் சுமையை கொடுக்கின்றனர். போதிய பயிற்சி யையும் வழங்கவில்லை. இதனால் வீடு வீடாகச் சென்று மக்களை சந் திக்கும் போது படிவங்களை கிழித்து எங்கள் முகத்தில் எரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதே போல இதில் கேட்கப்படும் கேள்விக ளுக்கு மக்களுக்கு விவரங்கள் தெரியவில்லை. தினமும் சுமார் 16 மணி நேரம் வேலை செய்ய வேண் டிய சூழல் உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 10 மணிக்கு மேல் வரை பணி செய்ய வேண்டிய சூழல் உள் ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்க ளுக்கும் குடும்பம், வீட்டு பணிகள் உள்ளது. பல இடங்களில் இரு சக் கர வாகனத்தில் செல்லும் ஊழி யர்கள் விபத்துகளில் சிக்கிக் கொள்கிறார்கள். சில மாநிலங்க ளில் தற்கொலை சம்பவமும் நடை பெற்றுவிட்டது. இங்குள்ள ஊழி யர்களும் வேலை விட்டு போய் விட லாமா என்று நினைக்கும் அளவிற் கான நெருக்கடி உள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையரை சந் தித்து முறையிட்டோம், உடனடி யாக ஆட்சியரை அழைத்து பேசுவ தாகக் கூறினார். ஆனால் முறை யிட்டதிற்கு பிறகு கூடுதல் நெருக் கடியை கொடுக்கின்றனர். கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும், உரிய பயிற்சி வழங்க வேண்டும் என்றார். இதேபோன்று ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட பல் வேறு மாவட்டத்தில் தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்கம், கிராம நிர்வாக அலுவலர் சங்கம், நில அளவர் சங்கம் மற்றும் வரு வாய்த்துறை உதவியாளர் சங்கம் அடங்கிய கூட்டமைப்பினர் புறக் கணித்துள்ளனர்.</p>
