தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தலித் மாணவர்களின் தற்கொலைக்காக மின்விசிறி வணிகத்தில் இறங்க போகிறார்களாம்! வெறுப்பைக் கக்கும் இந்துத்துவா ஊடகம்

31 Jan 2026, 3:56 pm
தலித் மாணவர்களின் தற்கொலைக்காக  மின்விசிறி வணிகத்தில் இறங்க போகிறார்களாம்! வெறுப்பைக் கக்கும் இந்துத்துவா ஊடகம்
<p><strong>தலித் மாணவர்களின் தற்கொலைக்காக &nbsp;மின்விசிறி வணிகத்தில் இறங்க போகிறார்களாம்! வெறுப்பைக் கக்கும் இந்துத்துவா ஊடகம்</strong></p> <p>ஶ்ரீநகர் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் தகவல்களை செய்தியாக பதிவிடும் &ldquo;இந்துத்துவா நைட் (hindutva knight)&rdquo; என்ற சமூக ஊடகம், தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், &ldquo;இப்போது யுஜிசியே (பல்கலைக்கழக மானியக் குழு) ரத்து செய்யப்பட்டு விட்டது. அதனால் வளாகங்களில் (Campuses) இன்னும் அதிகமான ரோஹித் வெமுலாக்கள் (சாதியப் பாகுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவரை போன்று நிறைய மாணவர்கள்) நமக்குத் தேவை. மேலும், நான் &ldquo;சீலிங் பேன் (மின்விசிறி - தூக்கிட்டு தொங்க)&rdquo; வணிகத்தைத் தொடங்கு கிறேன்&rdquo; என அதில் தலித் மாணவர்களை தற்கொ லைக்கு தூண்டும் அளவிற்கு மிக மோசமான அளவில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. &nbsp;அதாவது, யுஜிசியையே ரத்து செய்யப்பட்டு விட்டதால் (ரத்து செய்யப்படவில்லை - கூறுகிறார்கள்) சாதியப் பாகுபாடு அதிகரித்து தலித் மாணவர்கள் தற்கொலை அதிகரிக்கும். அதனால் அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்ய நாம் மின்விசிறி வணிகத்தில் ஈடுபட போகிறோம் என இந்துத்துவா கும்பலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆர்ஜேடி கண்டனம் ஜம்மு-காஷ்மீரின் ஶ்ரீநகரை தளமாக கொண்டு இயங்கும் இந்த &ldquo;இந்துத்துவா நைட்&rdquo; &nbsp;சமூக ஊடகத்தின் வெறுப்புக் கருத்துக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வரு கின்றன. &ldquo;இந்தியா&rdquo; கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா பார்தி கூறுகையில், &ldquo;உயர் சாதியைச் சேர்ந்த பயங்கரவாதியின் பதிவுகள் மோசமானதாக மாறிக்கொண்டு இருக்கிறது. நாட்டில் இருக்கும் தலித் குழந்தைகளுக்கு எதிரான கொலைச் சதித் திட்டங்கள் பகிரங்கமாகத் தீட்டப்பட்டு வரு கின்றன. பண்டையகாலம் முதலே இத்தகைய &lsquo;சாதிப் பயங்கரவாதிகள்&rsquo; நமக்கிடையே வளர்ந்து வருகின்றனர். தலித் மக்களை அழிப்ப தன் மூலம் இவர்களது &lsquo;சாதியற்ற சமூகம்&rsquo; &nbsp;உருவாகிவிடுமா?&rdquo; என கேள்வி எழுப்பி கண்டித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.