முந்தய பக்கம்

அவர்களை காணவில்லை..!

28 Mar 2026, 4:13 pm
அவர்களை  காணவில்லை..!
<p><strong>அவர்களை &nbsp;காணவில்லை..!</strong></p> <p>அவர்களை காணவில்லை பேருந்துநிலையம் செல்லும் போதெல்லாம் கவனிக்க முடியும்&hellip; நடைபாதை வசிப்பு &nbsp;நாடோடி வாசிகள்&hellip; சாக்பீஸ் கரித்துண்டுகள் சில கலர் பொடிகள்&hellip; பேருந்து நுழைவிடவோரம் காத்திருப்போர் வேடிக்கை பார்த்திருக்க&hellip; எட்டுக்குப்பத்து பதினைந்தடிக்குள் ஏதாவதொரு உருவத்தை சொற்பநேரத்தில் வரைவர்&hellip; திறமைக்கான சன்மானச் சில்லரை விழும் யாரிடமிருந்தாவது இரண்டு ஐந்து பத்து ரூபாய்த் தாளும் தான்&hellip; சற்றே பொழுதிறங்க சன்மானத்துடன் அவர்கள் எழுந்து போக&hellip; சாரை சாரையாக நடக்கும் காலடிகளில் கலைந்து போகும் ஓவியத்துகள்களாக அவர்களை காணவில்லை..!</p>
Share
FacebookXWhatsAppTelegram