பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி: துணை ஜனாதிபதி, முதல்வர் மரியாதை!
30 Oct 2026, 10:30 pm

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி: துணை ஜனாதிபதி, முதல்வர் மரியாதை!

சென்னை, அக். 30 -விடுதலைப் போராட்ட வீரர் ‘பசும்பொன்’ உ. முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது பிறந்தநாள் மற்றும் 64-ஆவது நினைவு நாள் அக்டோபர் 30 அன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள அவரது சிலைகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஆளுநர் அர்லேகர் ஆகியோர் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்தினர். சென்னை நந்தனம் சிக்னல் பகுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்குமுதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார், பெ. மதன் ராஜா, மரு.வே.க. ராஜீவ், மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா, நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான், தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரும் பசும்பொன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.தலைவர்களின் வருகையை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் 7 டிஐஜிக்கள், 40 எஸ்.பி.க்கள் தலைமையில் சுமார் 18,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.