சிப்பெட் நிறுவனத்தைப் பல்கலைக்கழகமாக மாற்றும் திட்டம் இல்லை: ஒன்றிய அரசு கைவிரிப்பு
16 Feb 2026, 2:37 pm
<p><strong>சிப்பெட் நிறுவனத்தைப் பல்கலைக்கழகமாக மாற்றும் திட்டம் இல்லை: ஒன்றிய அரசு கைவிரிப்பு</strong></p>
<p> புதுதில்லி, பிப். 16 - இந்தியாவின் பெட்ரோ கெமிக்கல் துறையில் முக்கியப் பங்காற்றும் ‘மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை’ (CIPET) ஒரு முழுமையான பல்கலைக்கழ கமாகத் தரம் உயர்த்தும் திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லை என்று ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வ மாகத் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் எழுப்பிய கேள்விக்கு (கேள்வி எண்: 2506), ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் அளித்துள்ள பதில், இந்நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 49 மையங்கள் - ஆனால் பல்கலைக்கழக அந்தஸ்து இல்லை அமைச்சரின் பதிலின்படி, நாடு முழு வதும் 22 மாநிலங்களில் 49 சிப்பெட் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தொழில்நுட்ப நிறுவனங்கள் (IPT), திறன் மேம்பாட்டு மையங்கள் (CSTS) மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சிப் பள்ளிகள் (SARP) என மூன்று முக்கியப் பிரிவுகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் 4 மையங்கள் இயங்கி வருகின்றன. இவ்வளவு பெரிய உட்கட்டமைப்பு இருந்தும், சிப்பெட் நிறுவனத்தைப் பல்கலைக்கழகமாக மாற்றும் எந்தவொரு முன்மொழிவும் அரசின் பரிசீலனையில் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால், இந்நிறுவனம் தொடர்ந்து இதர பல்கலைக்கழகங்களின் இணைப்பின் (Affiliation) கீழேயே இயங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. யுஜிசி ஊதியம் மறுப்பு சிப்பெட் நிறுவனத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) ஊதிய விகிதங் கள் வழங்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, அவ்வாறு வழங்கப்படவில்லை என்பதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது. மாறாக, 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை களின்படி, சாதாரண ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான ஊதிய அடுக்கு களிலேயே அவர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். இது உயர்கல்வித் துறையில் உள்ள பேராசிரியர்களுக்கான உரிய ஊதிய அங்கீகாரத்தை மறுப்பதாகும். ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. விமர்சனம் இது குறித்து ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிப்பெட் போன்ற உயர்தரத் தொழில் நுட்ப நிறுவனங்களைப் பல்கலைக்கழ கமாகத் தரம் உயர்த்த மறுப்பது, அந்தத் துறையின் வளர்ச்சியை முடக்கும் செயலாகும். தன்னாட்சி அதிகாரம் கொண்ட பல்கலைக்கழகமாக மாற்றினால் மட்டுமே சர்வதேச அளவிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், மாணவர்களுக்குத் தரமான கல்வி உரிமைகளை உறுதிப்படுத்தவும் முடியும். ஆனால், ஒன்றிய அரசோ இதை வெறும் ‘திறன் மேம்பாட்டு மையமாக’ மட்டுமே வைத்திருக்க விரும்புவது கண்டிக்கத்தக்கது. மேலும், விஞ்ஞானிகளுக்கும் பேராசிரியர்களுக்கும் யுஜிசி ஊதிய விகிதங்களை வழங்காமல், சாதாரண நிர்வாக ஊழியர்களைப் போலக் கருதுவது அவர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிடுவதாகும். கல்வி நிறுவனங்களை மேம்படுத்துவதை விட, அவற்றின் தன்னாட்சியைக் குறைப்பதிலேயே இந்த அரசு முனைப்புக் காட்டுகிறது. சிப்பெட் நிறுவனத்தைப் பல்கலைக்கழகமாக மாற்ற வலியுறுத்தித் தொடர்ந்து குரல் எழுப்புவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p> </p>
