தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

17 Mar 2026, 3:26 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

மறைந்த தலைவர்களின்  சிலைகளை மறைக்கத் தேவையில்லை

சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு அமலுக்கு வந்தன. அதனால் அரசு அலுவலகங்களில் இருந்த முதலமைச்சர், அமைச்சர் கள் மற்றும் அரசின் சாதனைகள் தொடர்பான புகைப்படங்கள்  அகற்றப்பட்டன. அதேபோல் மாநிலம் முழுவதும் பல்வேறு  இடங்களில் வைக்கப்பட்டிருந்த காமராஜர், அறிஞர் அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா  உள்ளிட்ட மறைந்த தலைவர்களின் சிலைகளும் மூடப்பட்டன. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்களுடன் திங்க ளன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிலைகளை  மறைக்க வேண்டாம் என திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள்  தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தன. இதனைத்  தொடர்ந்து மறைந்த தலைவர்களின் சிலைகளுக்கு போடப் பட்டிருந்த மறைப்புகளை அகற்றுமாறு மாவட்ட தேர்தல் அதி காரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ச. தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர்  அன்பில் மகேஸ், கமலஹாசன் வாழ்த்து

சென்னை: ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ்  தனது எக்ஸ் தளப் பதிவில், “பாசிச ஆரிய எண்ணங்களுக்கு  எதிராக எழுதும் எழுத்தாளருக்கு விருது வழங்குவது மிகவும்  பொருத்தமானது. தாமதமானாலும் இது நடந்துள்ளதில் மகிழ்ச்சி” என்று வாழ்த்தியுள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் வெளியிட்டு உள்ள வாழ்த்து அறிக்கையில், “வெயிலோடு போய்” சிறுகதை  தொகுப்பின் மூலம் என் வாசிப்புக்கு அறிமுகமான பெயர் ச.  தமிழ்ச்செல்வன். தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் சிறுகதை களின் பங்கை விளக்கும் அவரது நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வென்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. அவரை மனமார வாழ்த்துகிறேன், தொடர்ந்து இயங்குக” என்று தெரிவித்துள்ளார்.

தபால் துறையில் 24 மணி நேர  விரைவு டெலிவரி சேவை அறிமுகம்

சென்னை: இந்திய தபால் துறையில் ‘24 விரைவு தபால்’  என்ற புதிய சேவை செவ்வாயன்று முதல் அறிமுகமா கிறது. இதன் மூலம் முக்கியத்துவம் வாய்ந்த தபால்களை ஒரே நாளில் கொண்டு சேர்க்க முடியும். முதல் கட்டமாக தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா  உள்பட பெருநகரங்களில் இந்த சேவை தொடங்கப்படும். படிப்படியாக பிற நகரங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும். தனியார் கூரியர் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகை யில் குறைந்த கட்டணத்தில் இந்த சேவை வழங்கப்படவிருப்ப தால் வாடிக்கையாளர்களிடம் இது வரவேற்பைப் பெற்று உள்ளது. அத்துடன், 48 மணி நேரத்தில் டெலிவரி செய்யும் பிரீமியம் சேவையும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தபால் துறை தெரிவித்துள்ளது.

327 பார்வையாளர்கள் நியமனம் தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: வரவிருக் கும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமி ழகத்திற்கு 136 பொதுப் பார்வையாளர்கள், 40 காவல் பார்வையா ளர்கள் மற்றும் 151 செல வினப் பார்வையாளர் கள் என மொத்தம் 327  பேரை நியமித்து தேர்தல்  ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.  நாளை முதல் தங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இவர்கள்  பணியைத் தொடங்கு வார்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.