தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சோசலிசத்திற்கு மரணமும் இல்லை, தோல்வியும் இல்லை! சின்னியம்பாளையம் தியாகிகளின் 80-ஆம் ஆண்டு நினைவேந்தலில் தலைவர்கள் முழக்கம்

9 Jan 2026, 3:41 pm
சோசலிசத்திற்கு மரணமும் இல்லை, தோல்வியும் இல்லை!  சின்னியம்பாளையம் தியாகிகளின் 80-ஆம் ஆண்டு நினைவேந்தலில் தலைவர்கள் முழக்கம்
<p><strong>சோசலிசத்திற்கு மரணமும் இல்லை, தோல்வியும் இல்லை! &nbsp;சின்னியம்பாளையம் தியாகிகளின் 80-ஆம் ஆண்டு நினைவேந்தலில் தலைவர்கள் முழக்கம்&nbsp;</strong></p> <p>கோயம்புத்தூர், ஜன. 9 - &nbsp;&ldquo;சோசலிசத்திற்கு மரணமும் இல்லை, தோல்வியும் இல்லை; உழைப்பாளி வர்க்கத்தின் ரத்தத்தால் உருவான செங்கொடி, ஏகாதிபத்தியத்திற்கு வரலாற்று முடிவுரை எழுதும்&rdquo; என சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினப் பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் வீரம் செறிந்த முழக்கமிட்டனர். &nbsp;கோவை மண்ணின் வர்க்கப் போராட்ட வரலாற்றில் நீங்காத இடம்பிடித்த தியாகிகளான சின்னையன், ராமையன், ரங்கண்ணன் மற்றும் வெங்கடாச்சலம் ஆகியோரின் 80-ஆவது ஆண்டு செவ்வணக்க நாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உணர்ச்சிகரமாக அனுசரிக்கப்பட்டது. &nbsp;விண்ணதிரும் முழக்கங்களுடன் செஞ்சட்டைப் பேரணி &nbsp;ஆசிரியர் காலனியிலிருந்து தியாகிகள் மேடை நோக்கி புறப்பட்ட எழுச்சிமிகு செஞ்சட்டைப் பேரணி, சின்னியம்பாளையம் வீதிகளைச் சிவக்கச் செய்தது. &lsquo;தியாகிகள் நாமம் வாழ்க!&rsquo;, &lsquo;இன்குலாப் ஜிந்தாபாத்!&rsquo; போன்ற முழக்கங்கள் விண்ணதிர, நூற்றுக்கணக்கான தோழர்கள் அணிவகுத்து வந்தனர். தியாகிகள் மேடையில் வைக்கப்பட்டிருந்த மலர் வளையத்திற்கு தலைவர்களும் தொண்டர்களும் செங்கரம் உயர்த்தி வீரவணக்கம் செலுத்தினர். தொடர்ந்து, தியாகிகளின் வாரிசுகள் மற்றும் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டனர். &nbsp;&ldquo;ஏகாதிபத்தியத்தை வீழ்த்தும் செங்கொடி&rdquo; &nbsp; பொதுக்கூட்டத்தில் சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பேசுகையில், &ldquo;இந்த மேடை வெறும் வண்ணம் பூசப்பட்ட மேடை அல்ல; உயிர் ததும்பும் தியாக பீடம். பெர்னார்ட் ஷா சொன்னது போல, செங்கொடி என்பது வெறும் வண்ணம் அல்ல; அது சிகாகோ வீதிகளில் உழைக்கும் மக்கள் சிந்திய ரத்தம். பிரெஞ்சுப் புரட்சியிலும், இரண்டாம் உலக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததிலும் இந்தக் கொடிக்கே முதன்மையான பங்கு உண்டு. லெனின் அரிவாள் சுத்தியலை இதில் பதித்தார். இதே கொடிதான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அடக்கி வரலாற்று முடிவுரை எழுதும்&rdquo; என முழங்கினார். &nbsp;&ldquo;இன்று அமெரிக்காவிலேயே ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் செங்கொடி ஏந்திப் போராடுகிறார்கள். இந்தியா பஞ்சசீலக் கொள்கையை உலகுக்கு அளித்த நாடு. ஆனால், இன்று ஒரு நாட்டின் உளவு விவகாரத்தில் தலையிடும் அநீதியைக் கண்டிக்க பிரதமருக்கோ, நாடாளுமன்றத்திற்கோ துணிச்சல் இல்லை. ஆனால், செங்கொடி ஏந்திய சாதாரணத் தோழர்கள் வீதிகளில் புரட்சி முழக்கம் எழுப்புகிறார்கள். இதுவே நமது சர்வதேச அரசியல். நெல்சன் மண்டேலா சொன்னது போல, சமத்துவம் என்பது சோசலிசம் தான். இதற்கு மரணமும் இல்லை, தோல்வியும் இல்லை!&rdquo; என்று அவர் கூறினார். &nbsp;&ldquo;கொடிய சுரண்டலுக்கு எதிரான போர்&rdquo; &nbsp; சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். கண்ணன் பேசுகையில், தற்போதைய ஆட்சியாளர்களின் மக்கள் விரோதப் போக்கைச் சாடினார்: &ldquo;அன்று பெண் தொழிலாளியைப் பலாத்காரம் செய்த மேஸ்திரி பொன்னானை எதிர்த்து செங்கொடி இயக்கம் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தியது. ஆனால், இன்று உன்னோ போன்ற இடங்களில் பெண்ணை வேட்டையாடும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நீதிமன்ற நடைமுறைகளே சிதைக்கப்படுகின்றன. மோடி அரசு கொண்டு வந்துள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் (Labour Codes), தொழிலாளர்களை மீண்டும் அடிமைகளாக்கும் முயற்சியாகும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் கிராஜுவிட்டி, ஞாயிறு விடுமுறை இல்லை என்ற அராஜகத்தை &lsquo;வளர்ச்சி&rsquo; என்று அமித் ஷாவும், அண்ணாமலையும் தம்பட்டம் அடிக்கிறார்கள். எங்களுடன் மேடையில் நின்று விவாதிக்க இவர்களுக்குத் துணிவில்லை. இந்த ஏகாதிபத்திய அடிமைகளை வீழ்த்த, வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறும் தேசிய வேலைநிறுத்தத்தை மாபெரும் புரட்சிக் களமாக மாற்ற வேண்டும்!&rdquo; என அறைகூவல் விடுத்தார். &nbsp;சிபிஎம் சூலூர் தாலுகா செயலாளர் ஏ.சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிபிஐ வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா வரவேற்புரை ஆற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.தெய்வேந்திரன், சிபிஐ மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்று, தியாகிகளின் கனவான சமத்துவச் சமுதாயத்தைப் படைக்க உறுதியேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.