முந்தய பக்கம்

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான ஊழல் புகாரை விசாரிக்க தடை இல்லை

17 Jan 2026, 2:42 pm
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான ஊழல் புகாரை விசாரிக்க தடை இல்லை
<p><strong>நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான ஊழல் புகாரை விசாரிக்க தடை இல்லை</strong></p> <p>அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான ஊழல் புகாரை விசாரிக்க நியமிக்கப் பட்ட குழு செயல்படுவதற்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. &nbsp;கடந்த ஆண்டு மார்ச் 14 அன்று தில்லி யில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவரது வீட்டு க்குள் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் கண்டறியப்பட்டது. &nbsp; &nbsp;இதுதொடர்பாக ஏற்கெனவே நடத்தப் பட்ட நீதித்துறை உள்விசாரணையில், அந்தப் பணத்திற்கும் நீதிபதிக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவரைப் பதவி நீக்கம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. &nbsp;இந்நிலையில் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மக்க ளவை தலைவரால் அமைக்கப்பட்ட மூன்று நபர் விசாரணைக் குழு சட்டவிரோ தமானது எனக் கூறி நீதிபதி யஷ்வந்த் வர்மா மனுத்தாக்கல் செய்திருந்தார். இதன் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அமர்வு வழங்கிய தீர்ப்பில்,&lsquo;&lsquo;யஷ்வந்த் வர்மா மீதான &nbsp;ஊழல் புகாரை விசாரிக்கும் விசாரணைக் குழு தொடர்ந்து செயல்பட லாம். அதற்கு எந்தவிதஙம தடையும் கிடையாது. அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து யஷ்வந்த் வர்மாவின் மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்துவைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram