முந்தய பக்கம்

தில்லியில் பெரும் போராட்டம் வெடிக்கும் அபாயம்

6 Dec 2025, 2:48 pm
தில்லியில் பெரும் போராட்டம் வெடிக்கும் அபாயம்
<p><strong>தில்லியில் பெரும் போராட்டம் வெடிக்கும் அபாயம்</strong></p> <p>நாட்டின் தலைநகர் தில்லியில் கடந்த ஒரு மாத காலமாக காற்றின் தரம், மிக மோசமான அளவில் சரிந்து வருகிறது. இதனால் மக்கள் மூச்சு விட முடியாமல் கடுமையாக திணறி வருகின்றனர். வெளியே செல்ல அஞ்சி வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். குறிப்பாக சுவாசம் மற்றும் நுரையீரல் தொற்று நோயாளிகளால் தில்லி மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. ஆனால் தில்லி மற்றும் ஒன்றிய பாஜக அரசுகள் காற்று மாசை கண்டுகொள்ளாமல் உள்ளன. பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தாங்கள் வாழும் பகுதி, அலுவலகங்கள் &nbsp;மற்றும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பகுதிகளில் சிறப்பு ரசாயன பொடியை தூவி காற்று மாசை குறைத்துக் கொள்கின்றனர். மக்களை பற்றி கண்டுகொள்வதில்லை. காற்று மாசை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயலாற்றி வரும் மாநில மற்றும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து போராட்டம் நடத்தும் பொதுமக்களை குற்றவாளிகள் போல அமித் ஷா கட்டுப் பாட்டில் உள்ள தில்லி காவல்துறை அடக்குமுறையை ஏவி வருகிறது. இந்நிலையில், காற்று மாசு மற்றும் பாஜக அரசுகளின் செயலற்ற நிர்வா கத்தை கண்டித்து தில்லி மக்கள் ஜந்தர் மந்தரில் மாபெரும் போராட்டதை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இந்த எச்சரிக்கை தகவலை அடுத்து அதிகமான அளவில் மக்கள் கூடும் தில்லிப் பகுதியில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram