தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாக்குகளை நீக்கும் சதி நடக்கிறது ஒவ்வொரு வாக்காளரும் கவனமாக இருக்க வேண்டும்!

10 Nov 2025, 2:46 pm
வாக்குகளை நீக்கும் சதி நடக்கிறது ஒவ்வொரு வாக்காளரும் கவனமாக இருக்க வேண்டும்!

வாக்குகளை நீக்கும் சதி நடக்கிறது ஒவ்வொரு வாக்காளரும் கவனமாக இருக்க வேண்டும்!

முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் பேச்சு புதுக்கோட்டை, நவ. 10 - புதுக்கோட்டை மாவட்டம் கீர னூர் அருகே களமாவூர் முகாம்பிகை  பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, ரூ. 767 கோடி மதிப்பீட்டில்  புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி யும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும் உரையாற்றினார். அப்போது அவர் பேசியிருப்ப தாவது: வீடுகளில் முதியோர்கள் தனி மையை போக்கும் வகையில் அன்புச் சோலை திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக  25 மையங்களை தொடங்குகிறோம். அவர்களுக்கு சிற்றுண்டி, மதிய உணவு, பிசி யோதெரபி பயிற்சி, தொலைக்காட்சி,  இண்டோர் கேம்ஸ் உள்ளிட்ட வசதி கள் செய்து கொடுக்கப்பட உள்ளன. எதிர்க்கட்சி என்றால், எல்லா வற்றையும் எதிர்க்க வேண்டும் என்று  இல்லை. ஆனால், இன்றைய எதிர்க் கட்சிகள் மக்கள் நலத் திட்டங்களை யும் கூட கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள். தேர்தல் வர உள்ளது. பொது மக்கள் அனைவரும் தங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப் பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏதாவது காரணத்தை சொல்லி உங்களின் வாக்குகள், நீக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் கவன மாக இருக்க வேண்டும். மற்ற மாநி லங்களிலிருந்து வரும் செய்திகள் அதிர்ச்சியாக இருக்கின்றன. ஒரு மாநிலத்தில் வாக்காள ராக இருப்பவர்கள், இன்னொரு  மாநிலத்தில் வாக்களித்திருக்கிறார் கள். ஒரே வீட்டு முகவரியில் 66  போலி வாக்காளர்கள் இருந்திருக் கிறார்கள். ஒருவருடைய வீட்டு முக வரியில் 500 வாக்காளர்கள் இருந்தி ருக்கிறார்கள். அவர்கள் எல்லோ ருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்த வர்கள். முன்னாள் எம்.பி. ஒரு வரே, இரண்டு மாநிலங்களில் வாக்க ளித்து வெளிப்படையாக போட்டோ  போட்டிருக்கிறார். அந்த மாநிலத் தில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போது வாக்களித்த 35 லட்சம் பேரால், சட்டமன்றத் தேர்தலில் வாக்க ளிக்க முடியவில்லை. ஆனால், புதி தாக 25 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப் பட்டு இருக்கிறார்கள். எல்லா வற்றையும் மக்களவை எதிர்க்கட்சித்  தலைவர் ராகுல்காந்தி தெளிவாக  ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருக் கிறார். ஆனால், தேர்தல் ஆணையம்  தனக்கு சம்பந்தம் இல்லாத பிரச்சனை போன்று, அமைதியாக இருக்கிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு வாக்காளரும் கவ னமாக இருக்க வேண்டும். வாக்களிப் பது நம்முடைய ஜனநாயக உரிமை.  இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

திமுக கூட்டணியே மீண்டும் வெற்றி பெறும்

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் முதல்வர் பதிலளித்தார்.  அப்போது, எஸ்ஐஆர் தேவை என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனி சாமி கூறியிருக்கிறார் என்று தெரிவிக்கிறீர்கள்.  அப்படியானால் உச்ச நீதி மன்றத்தில் திமுக அளித்துள்ள மனுவில் ஏன் அவர் இணைந்துள்ளார்? என்று  முதல்வர் கேள்வி எழுப்பினார். “இந்த ஆட்சி மீது கடுமையான விமர்சனங்களை வைக்கும் எடப்பாடி பழனி சாமிக்கு வேறு வேலையில்லை. அவரின் விமர்சனங்கள் பற்றி நாங்கள் கவ லைப்படவில்லை. நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம்” என்று  கூறிய முதலமைச்சர், “எஸ்ஐஆர் குறித்து, நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம்.  நாளை (இன்று) எங்கள் கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறுகின்றன” என்று தெரிவித்தார். 2026 தேர்தலில் நான்குமுனை போட்டி இருக்குமா என்ற கேள்விக்கு, “எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி தான் மாபெரும் வெற்றி பெறும். 7வது முறை யாக நிச்சயமாக திமுக ஆட்சி அமைக்கும். நாங்கள் எதிர்கட்சிகளை பலமாக வும் பார்க்கவில்லை பலவீனமாகவும் பார்க்கவில்லை நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம்” என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.