கால் நூற்றாண்டாக சாலை வசதி இல்லை
5 Jan 2026, 6:21 pm
<p><strong>கால் நூற்றாண்டாக சாலை வசதி இல்லை</strong></p>
<p>ஆட்சியரிடம் மனு உதகை, ஜன. 5- நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூ ராட்சிக்குட்பட்ட கிராமங் களில் கால் நூற் றாண்டாக சாலை வசதி இன்றி தவித்து வரும் பொதுமக்கள், திங்க ளன்று ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது, தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட எடலமூலா, கடம்பூர் மற்றும் மஞ்சமூலா ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் கடந்த 25 ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இது குறித்து தேவர்சோலை பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மழைக்காலங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக மாறுவதால், பள்ளி செல்லும் குழந்தைகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பல நேரங்களில் மாணவர்கள் வழுக்கி விழுந்து காயமடையும் சம்பவங்களும் நடக்கின்றன. மேலும், முதியவர்கள் மற்றும் நோயாளிகளை அவசர காலங்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாகனங்கள் வர மறுக்கின்றன. இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சப்படுகின்றனர். போதிய மின்விளக்கு மற்றும் முறையான சாலை இல்லாததால், இரவு நேரங்களில் இந்தப் பாதையை கடப்பது பெரும் சவாலாக உள்ளது. எனவே எங்களது அடிப்படை உரிமையான சாலை வசதிக்காக கால் நூற்றாண்டாகப் போராடி வருகிறோம். ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். உடனடியாக ஆட்சியர் தலையிட்டு எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.</p>
