தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி இல்லை!

20 Jan 2026, 2:46 pm
அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி இல்லை!
<p><strong>அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி இல்லை!</strong></p> <p>நோயாளிகளின் உறவினர்கள் தவிப்பு கோவை, ஜன.20- கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் உள்நோயாளிகளுடன் தங்கி யுள்ளவர்களுக்கு போதிய காத்திருப்பு அறை வசதி இல்லாததால், கடும் குளிரில் வெளியிலேயே தங்கும் அவல நிலை ஏற் பட்டுள்ளது. கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மாவட் டங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை மிக முக்கியமான மருத்துவ மைய மாகத் திகழ்கிறது. நாள்தோறும் ஆயிரக் கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்ற னர். இந்நிலையில், உள்நோயாளிகளுடன் தங்கியிருக்கும் அவர்களது உறவினர்க ளுக்கு முறையான காத்திருப்பு அறைகள் ஒதுக்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள் ளது. தற்போது கோவை மாவட்டத்தில் நிலவி வரும் கடும் பனி மற்றும் குளிரைப் பொருட் படுத்தாமல், நோயாளிகளின் உறவினர்கள் இரவு நேரங்களில் திறந்த வெளியிலேயே தங்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் அவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களி டம் முறையிட்டாலும், வெளி நோயாளிகள் பிரிவில் மருந்து வாங்கிக் கொள்ளுங்கள் என அவர்கள் அலட்சியமாகப் பதில் அளிப்பதாக வும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், மருத்துவமனை வளாகத்தில் போதிய அளவு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் &nbsp;வழங்கும் இயந்திரங்களோ அல்லது குப் பைகளை சேகரிக்க முறையான குப்பைத் தொட்டிகளோ வைக்கப்படவில்லை. குறிப் பாக, மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் அம்மா உணவகம் அருகே கடுமை யான துர்நாற்றம் வீசுவதாகவும், இது நோயா ளிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, மருத்துவமனை நிர்வாகம் உட னடியாக தலையிட்டு, நோயாளிகளுடன் வரு பவர்களுக்கு போதிய காத்திருப்பு அறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் குப்பைத் தொட்டிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அடிப்படையில் ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.