தேன்சிட்டுப் பாட்டு - புதுச்சேரி அன்பழகன்
14 Feb 2026, 1:48 pm
<p><strong>தேன்சிட்டுப் பாட்டு</strong></p>
<p>தேன்சிட்டே!... தேன்சிட்டே.!.. ஊதா வண்ணத் தேன்சிட்டே! காற்றினிலே ஆடிக்கொண்டு கவிதை பாடும் தேன்சிட்டே! (தேன்சிட்டே...) சிறகை ஆட்டி நிற்கின்றாய் - காற்றில் சிலையாய் நின்று தவிக்கின்றாய்! வித்தை காட்டிப் பறக்கின்றாய் - புது விந்தை ஏனோ செய்கின்றாய்? (தேன்சிட்டே...) வண்டைப் போல ரீங்கரிக்கும் - இள வலிமை கொண்ட தேன்சிட்டே! மண்ணில் எங்கும் நில்லாது விண்ணில் பறக்கும் தேன்சிட்டே? (தேன்சிட்டே...) இதயம் துடிக்கும் வேகத்திலே – என் சிறகை நானும் அடிப்பேனே! காற்றில் நிலையாய் நின்றபடி - உன் கண்ணுக்கு அழகாய்த் தெரிவேனே! (தேன்சிட்டே...) எங்களைப் போல நீங்களும் - ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்திடலாம்! எதையும் தாங்கும் இதயத்தை – இன்னும் வலிமை யாக்கி வாழ்ந்திடலாம்! (தேன்சிட்டே...)</p>
