தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிற்சாலைக் கழிவுகளால் நாசமாகும் தென்பெண்ணை ஆறு விவசாயிகள் சங்கம் 15 கி.மீ. நடைபயணம்; சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

21 Jul 2026, 9:20 pm
தொழிற்சாலைக் கழிவுகளால் நாசமாகும் தென்பெண்ணை ஆறு விவசாயிகள் சங்கம் 15 கி.மீ. நடைபயணம்; சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

தொழிற்சாலைக் கழிவுகளால் நாசமாகும் தென்பெண்ணை ஆறு விவசாயிகள் சங்கம் 15 கி.மீ. நடைபயணம்; சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

கிருஷ்ணகிரி, ஜூலை 21 - கர்நாடக ரசாயனக் கழிவுகள் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்டக் குழு சார்பில் கெலவரப்பள்ளி அணையில் இருந்து 15 கி.மீ. தூரத்திற்குப் பிரம்மாண்ட நடைபயணம் செவ்வாயன்று நடைபெற்றது.

வட்டத் தலைவர் பி. ராஜா ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்நடைபயணத்திற்கு வட்டச் செயலாளர் முனிராஜ், நிர்வாகிகள் திம்மா ரெட்டி, முனியப்பா, ஆனந்த குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன், மாநிலச் செயலாளர் பி. பெருமாள், மாவட்டச் செயலாளர் சி. பிரகாஷ் ஆகியோர் நடைபய ணத்தைத் தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ் போராட்டத்தை வாழ்த்திப் பேசினார்.

நச்சுக்கழிவுகளால் அழிந்த நீர்வாழ் உயிரினங்கள்

செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன், “கடந்த 10 ஆண்டுகளாகக் கர்நாடகத் தொழிற்சாலைக் கழிவுகளால் தென்பெண்ணை ஆற்று நீர் கடும் மாசடைந்து கெலவரப்பள்ளி அணைக்கு வருகிறது. இதனால் அணையின் நீர்வாழ் உயிரினங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. எனவே, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். மேலும், 6 கிராமங்களில் உள்ள 2,000 ஏக்கர் பைமாசி நிலங்களுக்கு உடனடியாகப் பட்டா வழங்க வேண்டும் எனவும் கோரினார்.

சாலை மறியலும் பேச்சுவார்த்தையும்

நடைபயணம் சார்- ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தபோது காவல்துறையினர் தடுத்ததால், 700-க்கும் மேற்பட்டோர் தேன்கனிக்கோட்டை பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கச் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், நிலப் பட்டா கோரிக்கை அரசுக்குப் பரிந்துரைக்கப்படும் என்றும் சார்- ஆட்சியர் உறுதியளித்தார்.

இப்போராட்டத்தில் மாவட்டத் தலைவர் முருகேசன், பொருளாளர் எம்.எம். ராஜு, பொறுப்பாளர் பி. நாகராஜ் ரெட்டி, துணைத் தலைவர் ஆர்.கே. தேவராஜ், மாதர் சங்க நிர்வாகி ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, சிஐடியு தலைவர் பி.ஜி. மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிறைவாக சொன்னேகவுடா நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.